இரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மற்றும் உணவுத்திட்ட முறை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உடல் கொழுப்பு மற்றும் தசைகளில் குளுகோசை ஏற்றுக் கொள்வதற்கு தூண்டும் இன்சுலின் ஹார்மோனின் திறன் குறைபாடு (இன்சுலின் எதிர்ப்பு) மற்றும் அதனுடன் இணைந்த போதுமற்ற இன்சுலின் சுரப்பின் காரணத்தினால் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவுகள் போன்றவை இரண்டாம் வகை நீரிழிவு நோயின் இயல்புகளாகும். உடல் எடை குறைப்பு மற்றும் அன்றாட சக்தியின் செலவின அதிகரிப்பு ஆகியவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் என்று காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் வகை நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயத்திற்கு சில காரணிகள் தொடர்புடையதாக உள்ளன: அவை, உடற் பருமன், முந்தைய கர்ப்பக்கால நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் குடும்ப வரலாறு, பிறழ்ச்சியான இரத்த கொழுப்பு, மற்றும் சில இன குழுக்கள் அதிக அபாயத்தில் உள்ளனர். "நீரிழிவு முன்னம்" கொண்ட மக்களும் அதிக அபாயத்தில் உள்ளனர்; நீரிழிவு வரம்பில் இல்லா விட்டாலும், அவர்கள் அசாதாரண இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டிருப்பர். பெரும்பாலும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் வளர்வதற்கு முன்னால் நீரிழிவு முன்னம் ஏற்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபாய குழுக்களில் இரண்டாம் வகை நீரிழிவு நோயின் வளர்ச்சியை தடுப்பதற்கு நோக்கம் கொண்ட சோதனைகளை நாங்கள் தேடினோம். நீரிழிவு நோய் நிகழ்வு மற்றும் பிற விளைவுகள் மீதான அதிகமான உடலியல் இயக்க நடவடிக்கை மட்டும் அல்லது அதனுடன் இணைந்த உணவுத்திட்ட முறை தலையீடுகளின் பயன்களை பற்றி நாங்கள் மதிப்பிட்டோம்.

உடற்பயிற்சி மற்றும் உணவுத்திட்ட முறை தலையீட்டிற்கு 2241 பங்கேற்பாளர்களை மற்றும் வழக்கமான பரிந்துரைகளுக்கு 2509 பங்கேற்பாளர்களை சீரற்ற ஒதுக்கீடு செய்த எட்டு சோதனைகளை நாங்கள் இணைத்தோம். மேலும், உடற்பயிற்சி தலையீட்டிற்கு மட்டும் 178 பங்கேற்பாளர்கள், மற்றும் உணவுத்திட்ட முறைக்கு மட்டும் 167 பங்கேற்பாளர்கள் சீரற்ற ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். சோதனைகளில், சிகிச்சை தலையீடுகளின் காலஅளவு ஒரு வருடம் முதல் ஆறு வருடங்கள் வரை பரவி இருந்தது. ஆய்வுகளிடையே சிகிச்சை தலையீடுகள் வேறுப்பட்டிருந்தாலும், ஒருவர் அதிக எடல் கொண்டவராக இருந்தால், குறைந்தளவு கொழுப்பு, (குறிப்பாக,தெவிட்டிய கொழுப்பு), அதிகளவு மாவுச்சத்து மற்றும் அதிக நார்ச்சத்தை உட்கொள்ளல் என்று கலோரி கட்டுப்பாட்டை முதன்மையாக கொண்டிருந்தன. உடலியல் இயக்க நடவடிக்கை வேறுப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு வாரமும் சராசரியாக 150 நிமிடங்கள் கொண்ட சுறுசுறுப்பான நடை அல்லது சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஜாக்கிங் போன்ற பிற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. ஒரு பிசியோதெரபிஸ்ட், ஒரு உடற்பயிற்சி உடற்செயலியல் வல்லுநர், மற்றும் ஒரு உணவுத்திட்ட முறை நிபுணரால், தொடர் தனிப்பட்ட ஆலோசனை மூலம் சிகிச்சை தலையீடுகள் வழங்கப்பட்டன. உடற்பயிற்சி மற்றும் உணவுத்திட்ட முறையுடன், நீரிழிவு நோய் நிகழ்வு 37% (ஒப்பு அபாய குறைவு) குறைந்தது. உடல் எடை, இடுப்பு சுற்றளவு, மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் மேல் இது சாதகமான விளைவுகளைக் கொண்டிருந்தது. இரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதில், உடற்பயிற்சி மட்டுமான விளைவுகளை அறிய அதிக ஆதாரம் தேவைப்படுகிறது. நீரிழிவு நோய் மற்றும் இதயத் தமனி நோய் சம்மந்தமான நலக் குறைவு, அனைத்து-காரண நலக் குறைவு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மேல் தொடர்புடைய தரவை எந்த ஆய்வும் அறிக்கையிடவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.