நீரிழிவு நோய் வகை 2 க்கான உடற்பயிற்சி

நீரிழிவு நோய் வகை 2 ன் சிகிச்சையில், உடற்பயிற்சி, உணவு முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. எனினும், உடற்பயிற்சியின் தனிப்பட்ட விளைவை தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது, ஏனெனில், உடற்பயிற்சி, உணவுமுறை திருத்தல்களுடன் சேர்ந்தும், மருந்துகள், அல்லது வேறு விதமான சிகிச்சைகள் உள்ளடக்கிய கட்டுப்பாட்டு குழு உடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இந்த காக்ரேன் திறனாய்வுகள் ஆசிரியர்கள், இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு மீது , உடற்பயிற்சியின் விளைவை தீர்மானிக்க நோக்கம் கொண்டனர்.

உடற்பயிற்சி, இரத்தசர்க்கரை கட்டுப்பாட்டை மேப்மடுத்துவதையும் மற்றும் உடல் எடை இழப்பு இல்லாமலேயே இந்த விளைவு இருப்பதையும் தெளிவாக இந்த திறனாய்வு கண்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி உடலின் கொழுப்பை குறைக்கிறது, ஆகவே, ஒருவேளை, கொழுப்பு தசைமாற்றம் அடைவது, உடல் எடை இழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்பது விளக்கமாகலாம். உடற்பயிற்சி, உடலின் இன்சுலினின் எதிர்வினையை மேம்படுத்துவதோடு,மேலும், இரத்தத்தின் கொழுப்பைக் குறைத்தும் இருக்கிறது. வாழ்க்கைத்தரம் ஒரே ஒரு சோதனையில் மட்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இது, இரண்டு குழுமங்களுக்கிடையே எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. இரத்தத்தின் கொழுப்பினியின் நிலைகள், அல்லது இரத்த அழுத்தம் இவைகளில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் குழுமங்களுக்கிடையே காணப்படவில்லை. மொத்தம் 14 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு ஆராய்ச்சிகள் மதிப்பிடப்பட்டன. இவை, 377 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது, மேலும் உடற்பயிற்சி திட்ட தலையீடுகளில் மட்டும் வேறுபட்ட குழுமங்களை ஒப்பிட்டுள்ளன. ஆராய்ச்சிகளின் கால அளவு 8 வாரங்களிலுருந்து ஒரு வருடம் வரையாக இருந்தது. இரண்டு ஆராய்ச்சிகள், ஒன்று, ஆறு மாத உடற்பயிற்சி தலையீட்டின் முடிவிலும் ஆறுமாததிலும், மற்றும் இன்னொன்று, தலையீட்டிற்குப் பின் 12வது மாதத்திலும் பின்தொடர் தகவல்களை அறிவித்திருந்தன. பொதுவாக ஆராய்ச்சிகள் நல்ல முறையில் நடத்தப்பட்டிருந்தன, ஆனால் எல்லா சோதனைகளும் சமவாய்ப்பு முறை செய்ததாக தெரிவித்தாலும்,விளைவு மதிப்பீட்டாளர்களின் பார்வைகொணரா(blinding) முறை பற்றி தெரிவிக்கவில்லை,மேலும் சில ஆராய்ச்சிகள் மட்டும் பின்பற்றப்பட்ட முறை விபரங்களை கொடுத்திருக்கின்றன.உடற்பயிற்சியுடன் எந்தவித பாதகமான விளைவுகளும் தெரிவிக்கப்படவில்லை. நீரிழிவு நோயின் சிக்கல்களின் மீது உடற்பயிற்சியின் விளைவுகுறித்து எந்த ஆராய்ச்சியிலும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

ஆராய்ச்சிகளின், ஒப்பீடளவில் குறுகிய காலம், குறுப்பிடத்தக்க நீண்டகால சிக்கல்களையோ அல்லது இறப்பையோ தெரிவிப்பதை தடுத்திருக்கிறது. கொழுப்பேற்றம், இரத்த அழுத்தம், கொழுப்பினி, உடலின் சதை மற்றும் வாழ்க்கைதரத்திற்கான பகுப்பாய்வில் பங்கேற்பாளர்கள்,குறைந்த எண்ணிக்கையில் உட்படுத்தப்பட்டது மற்றொரு வரையாக இருந்தது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர .செந்தில் குமார் மு. கீதா மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information