சிரைநாள கால் சீழ்ப் புண்களின் மறுநிகழ்வுகளைத் தடுக்கும் அழுத்தக் காற்கச்சு (காலுறைகள்).

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

சிரைநாள கால் சீழ்ப்புண்கள் (காலின் கீழ் பகுதியிலுள்ள திறந்த புண்கள்) கால் நரம்புகளில் ஏற்படும் அடைப்பு அல்லது செயலிழப்பு காரணமாக விளையக்கூடும். துணிக்கட்டு அல்லது கச்சுகள் (காலுறைகள்) கொண்டு அளிக்கப்படும் அழுத்தம், இது போன்ற அநேக சீழ்ப் புண்களை குணப்படுத்த உதவக்கூடும். மேலும் குணமாதலுக்குப்பின் சீழ்ப் புண்களின் மறுநிகழ்வுகளைத் தடுப்பதற்காக இவை பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. அழுத்துதலின்மையோடு ஒப்பிடுகையில், அழுத்துதல், சீழ்ப் புண்களின் மறுநிகழ்வுகளைக் குறைக்கிறது என்பதை ஒரு சிறிய சோதனை உறுதி செய்கிறது. மித-அழுத்தக் காலுறைகளை அணிபவர்களைக் காட்டிலும் உயர் அழுத்தக் காலுறைகளை அணிபவர்களுக்கு புதிய சீழ்ப் புண்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதற்கு சிறிதளவு ஆதாரம் உள்ளது. உயர் அழுத்தத்தைக் காட்டிலும் மித அழுத்தக் காலுறைகள் அதிகளவில் சகித்துக் கொள்ளப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை. எனவே, அழுத்தக் காலுறைகள் சீழ்ப் புண்களைத் தடுக்கக் கூடும் என்பதற்கு சிறிதளவு ஆதாரம் இருக்கிறது, ஆனால் அந்த ஆதாரம் வலுவானதாக இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.