ஏற்கனவே ஒரு முறை வாதக் காய்ச்சல் கொண்டிருந்த மக்களில், ஸ்ட்ரப்ட்ரோகாக்கல் தொண்டை தொற்றுக்கள் மற்றும் வாதக் காய்ச்சல் தாக்குதல்களின் அபாயத்தை பென்சிலின் குறைக்கும்.

வாதக் காய்ச்சல் என்பது இதயத்தை பாதிக்கக் கூடிய தொண்டை தொற்றின் ஒரு அரிய சிக்கலாகும். ஏற்கனவே வாதக் காய்ச்சல் கொண்டிருந்த மக்கள், ஒழுங்கான பென்சிலின் பெறாமல் போனால் ஸ்ட்ரப்ட்ரோகாக்கல் தொண்டை தொற்றுக்கு பின் மீண்டும் அதினால் அவதிப்படக் கூடும். இதனை தடுக்க, ஊசியாகவோ அல்லது மாத்திரைகளாகவோ பென்சிலின் கொடுக்கப்படலாம். மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எளிதாக இருக்கும் ஆனால், ஊசிகளை போன்று வேலை செய்யாமல் போகலாம். சோதனைகளின் திறனாய்வு, வெவ்வேறு வழிகளில் பென்சிலினை அளிப்பதை ஒப்பிட்டன. மாத்திரைகளைக் காட்டிலும் ஊசிகளாக பென்சிலின் சிறப்பாக செயல்பட்டது. ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கு அளிக்கப்படும் ஊசிகளை காட்டிலும் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அளிக்கப்பட்டது சிறப்பாக வேலை செய்தன. எனினும், அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information