ஃபைப்ரோமியால்ஜியா (தசைநார் வலி) உடைய வயது வந்தவர்களுக்கான மனம் மற்றும் உடல் இடையேயான இணைப்பின் மேல் கவனம் செலுத்துகிற சிகிச்சை தலையீடுகள்

ஆராய்ச்சி கேள்வி

வலி, உடற் செயல்பாடு, மனோநிலை மற்றும் பக்க விளைவுகள் போன்றவற்றின் மேல் ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான மனம் மற்றும் உடல் சிகிச்சையின் விளைவுகள் என்ன?

ஃபைப்ரோமியால்ஜியா என்ன பிரச்சினைகளை ஏற்படுத்தும்?ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட மக்கள், நாள்பட்ட,பரந்த உடல் வலியையும், மற்றும் அடிக்கடி ஏற்படும் சோர்வு (களைப்பாக உணர்வது), விறைப்பு, மனச்சோர்வு, மற்றும் தூக்க பிரச்சினைகளை கொண்டிருப்பர்.

மனம்-உடல் சிகிச்சை தலையீடுகள் எவை?

மனம்-உடல் தலையீடுகள், உயிரியல் பின்னூட்டம், மன விழிப்பு நிலை, இயக்கச் சிகிச்சைகள், உளவியல் சிகிச்சை மற்றும் தளர்வு சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளை அடக்கும். உங்கள் உடலில், தளர்வது போன்ற நுட்பமான மாற்றங்களை செய்ய, உங்கள் உடல் பற்றிய தகவல் பெற உதவும் என்று மின் உணரிகளை இணைப்பதாக பயோஃபீட்பேக் உள்ளது. மனவிழிப்பு நிலை என்பது எண்ணங்கள்,உணர்வுகள் மற்றும் உடல் உணர்வுகளைப் பற்றிய விழிப்புடன் இருத்தல் ஆகும். எல்லா மன-உடல் சிகிச்சைகள், எண்ணங்கள்,நடக்கை மற்றும் உணர்வுகள் இடையே இணைப்பை ஏற்படுத்தி. மக்களுக்கு அவர்களின் அறிகுறிகளுடன் சமாளிக்க உதவக் கூடியதாகும்.

ஆய்வு பண்புகள்

ஃபைப்ரோமியால்ஜியா கொண்ட வயது வந்தவர்களுக்கான மன-உடல் சிகிச்சைகளின் விளைவை அறிய ஒரு திறனாய்வு நடத்தப்பட்டது. அக்டோபர் 2013 வரை, அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, நாங்கள் 4234 வயது வந்தவர்கள் சம்பந்தப்பட்ட 61 ஆய்வுகளை கண்டறிந்தோம்.

-பல ஆய்வுகள் பெண் பங்கேற்பாளர்களை மட்டுமே சேர்த்திருந்தது, ஆனால், ஒரு சில ஆய்வுகளில் சில ஆண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.-பங்கேற்பாளர்களுக்கு லேசான முதல் கடுமையான ஃபைப்ரோமியால்ஜியா இருந்தது.-மன-உடல் தலையீடுகள், மருந்து பயன்பாடு போன்ற 'வழக்கமான பராமரிப்புடன்' ஒப்பிடப்பட்டது. இரண்டாம் நிலை பகுப்பாய்வு கூடுதலாக, மன-உடல் சிகிச்சையை போன்றே சமமான நேரத்திற்கு தகவல்களை பெற்று சம்பந்தப்பட்ட ஒரு 'கவன கட்டுப்பாடு சிகிச்சை'-யோடு முடிவுகளை ஒப்பிட்டது.

சிகிச்சை முடிவுற்ற போதான முக்கிய முடிவுகள்

-உளவியல் சிகிச்சைகளை வழக்கமான பராமரிப்போடு ஒப்பிடும்போது, உடற் செயல்பாடு, வலி, மனோநிலை மற்றும் பக்க விளைவுகளை மேம்படுத்தியது என்று தரம் குறைந்த சான்று காட்டியது. வழக்கமான பராமரிப்போடு ஒப்பிடும்போது, உளவியல் சிகிச்சை குழுவிலிருந்து அதிக மக்கள் விலகிக் கொண்டனர்.

-உடற் செயல்பாடு, வலி ​​மற்றும் மனோநிலையில், உயிரியல் பின்னூட்டம் மற்றும் வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களிடையே சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமமும் இல்லாமல் இருந்தது, ஆனால் இது எதேச்சையாக நடந்திருக்கக் கூடும். வழக்கமான பராமரிப்பு குழுவை விட, உயிரியல் பின்னூட்ட குழுவிலிருந்து அதிக மக்கள் விலகிக் கொண்டனர். எந்த ஆய்வுகளும் எந்த பக்க விளைவுகளையும் பதிவு செய்யவில்லை.

- உடற் செயல்பாடு, வலி, மனோநிலை மற்றும் மற்றும் விலகுபவர்களின் எண்ணிக்கை ஆகியவை விழிப்பு நிலை சிகிச்சை மற்றும் வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களிடையே சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமமும் இல்லாமல் இருந்தது. எந்த ஆய்வுகளும் எந்த பாதகமான நிகழ்வுகளையும் பதிவு செய்யவில்லை.

-இயக்கச் சிகிச்சைகள், உடற் செயல்பாடு, வலி, மனோநிலை, பக்க விளைவுகள் அல்லது சிகிச்சையிலிருந்து விலகிய மக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தியதா என்பது எங்களுக்கு உறுதியாய் தெரியவில்லை. இயக்கச் சிகிச்சைகள் பெற்ற மக்களுக்கு வலி மற்றும் மனோ நிலை மேம்பட்டது, ஆனால் சான்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது. தலையீடு குழுவில், அதிக மக்கள் விலக்கிக் கொண்டனர் மற்றும் இரண்டு பங்கேற்பாளர்கள் தங்களின் வலி அதிகரித்தது என்று அறிக்கையிட்டனர்.

-தளர்வு சிகிச்சைகளை வழக்கமான பராமரிப்போடு ஒப்பிடும்போது, உடற் செயல்பாடு மற்றும் வலியை மேம்படுத்தும் என்று உறுதியாக கூறமுடியவில்லை, ஏனெனில் சான்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது. மனோநிலை மற்றும் சிகிச்சையிலிருந்து விலகுவதில், தளர்வு சிகிச்சைகள் மற்றும் வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களிடையே சிறிதளவு அல்லது எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்தது. எந்த பாதகமான நிகழ்வுகளும் பதிவிடப்படவில்லை.

ஃபைப்ரோமியால்ஜியா உள்ளவர்களுக்கு , மன-உடல் சிகிச்சை முறைகளை பயன்படுத்திய போது, சிகிச்சை முடிவில் என்ன நடந்தது என்பதற்கான சிறந்த மதிப்பீடுகள்

உளவியல் சிகிச்சைகளின் பயன்பாடு குறித்த முக்கிய கண்டுப்பிடிப்புகளின் சுருக்கம் கீழே வருமாறு.

- 1 முதல் 25 வாரங்களுக்கு பிறகு உடற் செயல்பாடு (அதிக புள்ளிகள் என்றால் அதிகமான வரம்புகள் என்று அர்த்தம்)

உளவியல் சிகிச்சைகளை பயன்படுத்திய மக்கள், வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களை விட, தங்களின் உடற் செயற்பாட்டை, 0 முதல் 100 வரையான அளவீட்டில் 2 புள்ளிகள் குறைவாக மதிப்பிட்டனர் (7.5% முழுமையான முன்னேற்றம்)

- 3 முதல் 14 வாரங்களுக்கு பின்னான வலி (அதிக புள்ளிகள் என்றால் மோசமான அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான வலி என்று அர்த்தம்)

உளவியல் சிகிச்சைகளை பயன்படுத்திய மக்கள், வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களை விட, தங்களின் வலியை, 0 முதல் 100 வரையான அளவீட்டில் 2 புள்ளிகள் குறைவாக மதிப்பிட்டனர் (3.5% முழுமையான முன்னேற்றம்)

-மனோநிலை (அதிக புள்ளிகள் என்றால் மோசமான அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான வலி என்று அர்த்தம்)

உளவியல் சிகிச்சைகளை பயன்படுத்திய மக்கள், வழக்கமான பராமரிப்பை பெற்ற மக்களை விட, தங்களின் மனோநிலையை, 20 முதல் 80 வரையான அளவீட்டில் 3 புள்ளிகள் குறைவாக மதிப்பிட்டனர் (4.8% முழுமையான முன்னேற்றம்)

-எந்த காரணத்திற்காகவும் சிகிச்சையிலிருந்து விலகிக் கொள்ளுதல்

வழக்கமான பராமரிப்பில், 1000 மக்களில், மொத்தம் 148 மக்கள் விலகிக் கொண்டதை (6% முழுமையான முன்னேற்றம்) ஒப்பிடுகையில், உளவியல் சிகிச்சைகளிலிருந்து, 1000 மக்களில், மொத்தம் 204 மக்கள் விலகிக் கொண்டனர்.

-பக்க விளைவுகள்

வழக்கமான பராமரிப்பில், 1000 மக்களில், மொத்தம் 51 மக்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டதை (4% முழுமையான முன்னேற்றம்). ஒப்பிடுகையில், உளவியல் சிகிச்சைகளில், 1000 மக்களில் மொத்தம் பத்தொன்பது மக்களுக்கு ஏற்பட்டது. இது எதேச்சையாக நடந்திருக்கக் கூடும்.

மன-உடல் சிகிச்சைகளின் பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான தகவல் எங்களுக்கு இல்லை. வலி மோசமாகுதல், அரிய பாதகமான நிகழ்வுகளில் அடங்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information