Skip to main content

குழந்தைகள் உடல் பருமன் தடுக்கும் முறைகள்

இளமைக்கால உடல்எடை பருமன் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் சமூக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றது. இவை முதிர்வடைந்தபின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடினை விளைவிக்கும் அபாயமும் உள்ளது.  உடல்பருமன் அதிகரித்தல் உடல் செயல்பாடு மற்றும் ஊட்டசத்து தொடர்பானது. இந்த இரு விஷயங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடல் பருமன் அதிகரித்தலை தடுக்க சர்வதேச அளவில் 55 ஆய்வுகள் நடத்தப்பட்டது.  பல ஆய்வுகள் ஓரளவிர்க்கு குழந்தைகள் ஊட்டசத்து அல்லது உடல் செயல்பாட்டை மேம்படுத்த முடிந்தது என்றாலும், சில ஆய்வுகளில் மட்டுமே குழந்தைகளின் உடல் பருமன் அளவில் மாற்றம் பார்க்க முடிந்தது.  நாங்கள் இந்த ஆவுகளை அனைத்தையும் இனைத்த போது,இந்த திட்டங்களால் திட்டமான வேறுபாடு காணமுடிந்தது, ஆனால் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் இடையே உள்ள அதிக வேறுபாடுகளை எங்களால் விளக்க இயலவில்லை. மேலும் எதிர்மறை கண்டுபிடிப்புகள் உடைய சிறிய ஆராய்ச்சிகள் விடுபட்டதாள் முடிவுகள் ஒருதலைச் பட்சமாக இருக்கலாம். நங்கள் சில திட்டங்கள் மற்றதை விட ஏன் நன்றாக வேலைசெய்தது என்பதையும் அந்த திட்டங்களில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு ஏதேனும் தீங்கு இருந்தனவா என்பதையும் கண்டறிய முயற்சித்தோம்.  இத்திட்டங்கள் தீங்கு என அறிய ஒரு சில ஆய்வுகளை இருந்தன என்றாலும், உடல் பருமன் அதிகரித்தலை தடுக்கும் உத்திகள் உருவ அமைப்பு பற்றிய கவலைகள், ஆரோகியமற்ற உணவு கட்டுப்பாடு நடைமுறைகள், எடைகுறைவின் அளவு, அல்லது ஆரோகியமற்ற அணுகுமுறைகளை அதிகரிக்காது என்றும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் முடிவுகள் தெரிவித்தது.  அதிக ஆய்வுகள் இளம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மீது நடத்தப்பட்டு,குறிப்பிட்ட இந்த வயதினரிடத்தில் உடல் பருமன் அதிகரித்தலை தடுப்பதற்கு நடத்தப்பட்டது மற்றும் அந்த தலையீடுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அறிய நடத்தப்பட்டது என்பது முக்கியமாகும்.  மேலும் வீடுகள், பள்ளிகள், குழந்தை பராமரிப்பு அமைப்புகள், சுகாதார அமைப்பு மற்றும் பரந்த சமூகத்தில் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை உட்பொதித்து அனைத்து குழந்தைகளும் பயனடையும் வண்ணம் வழிகளை உருவாக்க வேண்டும்.     

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Citation
Brown T, Moore THM, Hooper L, Gao Y, Zayegh A, Ijaz S, Elwenspoek M, Foxen SC, Magee L, O'Malley C, Waters E, Summerbell CD. Interventions for preventing obesity in children. Cochrane Database of Systematic Reviews 2019, Issue 7. Art. No.: CD001871. DOI: 10.1002/14651858.CD001871.pub4.