Skip to main content

ஒரு மோதலுக்குள்ளான சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, அது மோட்டார் வாகனமானாலும், தலைக்கவசம் அணிவது தலை மற்றும் முக காயங்களின் அபாயத்தைத் வியக்கத் தக்க வகையில் குறைக்கிறது.

எல்லா வயது மக்களுக்கும், சைக்கிள் ஓட்டுதல் ஒரு ஆரோக்கியமான மற்றும் பிரபலமான நடவடிக்கையாகும். சைக்கிள் ஓட்டுபவர்களை உள்ளடக்கிய மோதல்கள் பொதுவானதாகும், மற்றும் அடிக்கடி மோட்டார் வாகனங்களை உள்ளடக்கும். சைக்கிள் ஓட்டுபவர்கள் உள்ளடங்கிய மோதல்களில், முக்கால் பங்கு இறப்புகளில் தலை காயங்கள் பொறுப்பாகும். முக காயங்களும் பொதுவானதாகும். ஒரு மோட்டார் வாகனம் சம்மந்தப்பட்டதா என்பது பொருட்டில்லாமல், தலைக்கவசம் அணிவது தலை அல்லது மூளை காயத்தின் அபாயத்தைத் தோரயமாக மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கும் மேலாக குறைக்கிறது என்று இந்த திறனாய்வு கண்டது. கீழ் முக காயங்களை தலைக் கவசங்கள் தடுக்கவில்லை என்றாலும், நடு மற்றும் மேல் முக காயங்களும் குறிப்பிடும் வகையில் குறைந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Thompson DC, Rivara F, Thompson R. Helmets for preventing head and facial injuries in bicyclists. Cochrane Database of Systematic Reviews 1999, Issue 4. Art. No.: CD001855. DOI: 10.1002/14651858.CD001855.