சமூக சிகிச்சை தலையீடுகள், வயது வந்தவர்களில் புகைப்பிடிப்பதை குறைக்குமா?

சிகிச்சை தலையீடுகளின் சமூகங்கள் அவர்களின் திட்டத்தை பற்றி போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இது மிக அரிதாகவே புகைப்பிடித்தலை விடும் அதிக விகிதங்களுக்கு வழிவகுத்தது. அதே போல், ஆரோக்கிய அபாயங்களை பற்றிய அறிவு, புகைப்பிடித்தலை பற்றிய மனப்பான்மை, புகைப்பிடித்தலை விடுதலுக்கான அதிக முயற்சிகள், மற்றும் புகைப்பிடித்தலை விடுதலுக்கான சிறந்த சுற்றுச் சூழல் மற்றும் சமூக ஆதரவு ஆகியவையும் சமூகத்தில் புகைப்பிடித்தலின் நிலைகள் குறைவதற்கு சம்மந்தப்படவில்லை. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த சோதனைகளில், தீவிர புகைப்பாளர்களை காட்டிலும்,லேசான முதல் மிதமான புகைப்பாளர்கள் சிறிதளவு மேம்பட்டிருந்தனர் (யுஎஸ் காமிட் ஆய்வு) மற்றும் பெண்களை விட ஆண்கள் சிறப்பாக மேம்பட்டிருந்தனர் (ஆஸ்திரேலியா கார்ட் ஆய்வு), ஆனால் சிகிச்சை தலையீடு மற்றும் கட்டுப்பாடு சமூகங்களிடையே, ஒட்டுமொத்த புகைப்பிடிக்கும் விகிதங்கள் ஒரே மாதிரி இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information