ஜலதோஷத்திற்கு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள காற்று

திறனாய்வு கேள்வி

ஜலதோஷம் உள்ளவர்களுக்கு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள காற்றை ஒரு கருவி முலம் அளிப்பதின் திறனை நாங்கள் ஆராய்ந்தோம்.

பின்புலம்

ஜலதோஷம் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகவும் பொதுவானதொரு தொற்று ஆகும். எவை பொதுவாக எந்த சிக்கல்களையும் உண்டுபண்ணாது, இருப்பினும் நோய் அறிகுறிகளால் அசௌகரியம் அல்லது பள்ளி அல்லது அலுவலகத்திற்கு செல்லாமல் இருபதற்கு காரணமாக இருக்கலாம். நோய் கண்டறிதல் நோயின் அறிகுறிகள் சார்ந்தே இருக்கும் மேலும் நோய் அறிகுறிகளின் அடிப்படையில், சிகிச்சைகள் அளிக்கப்படும். காய்ச்சல், பசியின்மை, குளிர்ந்த உணர்வு, தலைவலி, மற்றும் தசை வலிகள் போன்றவற்றை கொண்டிருக்கும். இவற்றிற்கு பல நோய் அறிகுறிகள் பொதுவாக ஜவ்வு வீக்கம் மற்றும் நாசியின் உட்புறம் சளி கட்டியாவதனால் ஏற்படும் நாசி அடைப்பு போன்றவையே காரணம் என்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆவிபிடித்தல் மூலம் சளியை இலகுவாக இறக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஜலதோஷம் உண்டுபனும் வைரஸ் வெப்பத்திற்கு மாறக்கூடும் என்று ஆய்வுக்கூட ஆதாரம் உள்ளது, இருப்பினும் அதனின் திறன் பெரிய மருத்துவ ஆராய்ச்சிகளில் பரிசோதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் நீராவிபிடித்தல் ஜலதோஷத்தின் அறிகுறிகளுக்கு மனதளவிலான தீர்வை கொடுப்பதினால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

தேடல் தேதி

இங்கே கூறப்பட்டுள்ள சான்றுகள் 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதிவரையில் கிடைக்கப் பெற்றவை.

ஆய்வு பண்புகள்

1987 முதல் 1995 வரை ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட 387 பங்கேற்பாளர்களை கொண்ட ஆறு , இரட்டை மறைவுக் சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். பொதுவாக அனைத்து ஆய்வுகளிலும் ரினோடிர்ம் சாதனம் கொண்டு வெப்பமான ஈரப்பதமான காற்று பலவித நேரம் மற்றும் ஓட்ட விகிதம் சாதாரண சளிக்கு அளிக்கப்பட்டது. மூன்று ஆய்வு அமெரிக்காவிலும், இரண்டு பிரிட்டன் மற்றும் ஒரு ஆய்வு இஸ்ரேல்லில் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து ஆய்வுகளும் இயற்கையாக நிகழ்கிற சாதாரண ஜலதோஷம் வந்தவர்களை

ஆய்வு நிதி மூலங்கள்

நான்கு ஆய்வுகளில் நேட்சர் செரிணி கம்பெனியும் எ பிச்சம் இரண்டு ஆய்வுகளுக்கும் ரினோடிர்ம் சாதனம் வழங்கியது. கிளீவ்லாண்ட் கிளினிக் உள் நிதி ஒரு ஆய்வுக்கும் மற்றும் ஓர் ஆய்வு ஆசிரியருடைய விருப்புரிமை நிதியின் முலம் செய்யப்பட்டது. மீதமுள்ள ஆய்வுகள் பக்க விளைவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

முக்கிய முடிவுகள்

சூடான, ஈரப்பதமான காற்று மூச்சில் இழுத்தல் சேர்க்கப்பட்டுள்ள எந்த ஆய்வுகளிலும் மருத்துவ அறிகுறிகள் மோசமாகவில்லை என்று தெரிவிக்கவில்லை. பங்கேற்பாளர்களை இடையே விடாப்பிடியான அறிகுறிகள் இரண்டு ஆய்வுகளில் இல்லாமல் இருந்தது, இருப்பினும் இந்த முடிவுகள் முரணானவையாக இருந்தன. எந்த ஆய்வுகளும் எந்த பாதகமான நிகழ்வுகளையும் பதிவு செய்யவில்லை. சிகிச்சை ரைனோ வைரஸ் சிதறடிக்கும் திறன் சிகிச்சைக்குிஇல்லை.

சான்றின் தரம்

சாதாரண ஜலதோஷத்தைத்தின் விரியத்தை (நோய் அறிகுறிகள் குறைவதைப் பொருத்து அளவிடல்) விளைவுபயனுக்கு GRADE அளவுகோலை கொண்டு நாங்கள் இந்த ஆதாரங்களை பதிப்டோம். ஒருதலை சார்பு அபாயம் மற்றும் ஆய்வுகளின் முடிவுகளின் நிலையற்ற தன்மை போன்றவற்றால் ஆதாரத்தின் தரத்தை குறைவு என்று மதிப்பிட்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information