தீவிர கணுக்கால் சுளுக்கிற்கு அளிக்கப்படும் மீயொலி சிகிச்சைமுறை

தீவிர கணுக்கால் சுளுக்கிற்கு, மீயொலி (Ultrasound) அல்லது உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகிறது. மீயொலி மூலம் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு மென்மையான திசு சிகிச்சைக்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது. மருத்துவ பயிற்சியில் மீயொலியின் பயன்பாடுகளைப் சோதனையிட்ட ஆய்வுகளிலிருந்து பெற்ற ஆதாரங்களை பார்வையிடுவதே இந்த ஆய்வுரையின் நோக்கமாகும். ஆறு சோதனை ஆய்வுகள் இந்த ஆய்வுரையில் சேர்க்கப்பட்டது. சோதனை முறைகள் பற்றிய குறைவான அறிக்கைகள், சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளின் பாரபட்சமான (ஒருதலைச் சார்பு ) தன்மையின் அபாயத்தை மதிப்பீடு செய்வதை கடினமாக்கியது. இந்த ஆறு சோதனைகள், குறுகிய கால தீவிர கணுக்கால் சுளுக்கு கொண்ட 606 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. ஐந்து சோதனைகள், மீயொலி சிகிச்சையை போலி மீயொலி சிகிச்சையோடு (இயந்திரம் அணைக்கப்படும்) ஒப்பிட்டு பார்த்தது. ஆறு சோதனைகளில், மூன்று மட்டும் மீயொலி சிகிச்சையை மூன்று பிறவகை சிகிச்சை முறைகளோடு ஒற்றையளவில் ஒப்பிட்டன. ஐந்து போலியாக கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் (இயந்திரம் அணைக்கப்பட்ட மீயொலி சிகிச்சை) மறு ஆய்விலிருந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மீயொலி சிகிச்சை, மீட்பை மேம்படுத்தவோ அல்லது கணுக்கால் சுளுக்கிற்கு பின் வரும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவோ, அல்லது பாதிக்கப்பட்ட கால் மற்றும் கணுக்காலில் நிற்க தேவையான திறனை மேம்படுத்தவோ உதவவில்லை என்பதை இந்த ஆய்வுகள் கண்டறிந்தது. அநேக கணுக்கால் சுளுக்குகள் விரைவில் குணமடைந்து விடும். மீயொலி சிகிச்சை முறை சிறிதளவில் மீட்பை மேம்படுத்தினாலும், இந்த சாத்தியப் பயனை முக்கியமானதென்று கருத்தில் கொள்ளும் போது, மிகவும் சிறியதாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information