மனச்சோர்வு கொண்ட வயதான மக்களில் மனச்சோர்வு நீக்கி மருந்துகளோடு ஒப்பிடப்பட்ட போலி சிகிச்சைமுறை

எங்களின் முறைப்படுத்தப்பட்ட தேடலின் சேர்க்கை விதியை பூர்த்தி செய்து மற்றும் பகுப்பாய்விற்கு தகுந்த தரவை வழங்க முடிந்த பதினேழு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். வயதான மக்களில் மனச்சோர்வு சிகிச்சையின் பலனை ஆராய்ந்த 17 போலி சிகிச்சை சோதனைகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். எங்களின் பகுப்பாய்வில் 2000-க்கும் குறைவான நோயாளிகளை மட்டுமே சேர்க்க முடிந்தது. ட்ரைசைகிளிக் ஆன்டிடிப்ரேஷன்ட்ஸ் (டிசிஏ'ஸ் ), செலெக்ட்டிவ் செரடோனின் ரீஅப்டேக் இன்ஹபிடார்ஸ்,(எஸ்எஸ்ஆர்ஐ'ஸ்) மற்றும் மோனோஅமின் ஆக்ஸ்சிடேஸ் இன்ஹபிடார்ஸ் (எம்ஏஓஐ'ஸ்) ஆகியவை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் வாழும் நோயாளிகள் இருவரிலும் திறன் மிக்கதாக காணப்பட்டன குறைந்தளவு டிசிஏ சிகிச்சை திறன் மிக்கதாக இருக்கக் கூடும், ஆனால், மேற்படியான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information