கடுமையான மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் வழி மருந்துகள்

கடுமையான மலேரியாவிலிருந்து உயிர் பிழைப்பதை ஆர்டிமிஸினின் மருந்துகள் மேம்படுத்துகின்றன. ஆர்டிமிஸினின் மருந்துகள் முதலாவதாக ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டு பண்டை காலத்தில் இருந்தே காய்ச்சல் மற்றும் மலேரியாவுக்கு சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய மருந்து ஆகும். இந்த மருந்துகள் விரைவாக செயல்படுவதோடு குயினைன்க்கு எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொண்ட மலேரியா ஒட்டுண்ணிகளையும் எதிர்க்க வல்லமை வாய்ந்தது. கடுமையான மற்றும் சிக்கல்வாய்ந்த மலேரியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, அவர்களின் இறப்பை தடுப்பதில் குயினைன்னை விட ஆர்டிமிஸினின் மருந்துகள் சிறந்தது என்று இந்த திறனாய்வு கூறுகின்றது. இதுவரை கிராமப்புறங்களில் நோயாளிகள் மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது ஆசனகுளிகை (suppositories) மூலம் அளிக்கப்படும் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இந்த மருந்துகளால் மிகக்குறைவான பக்க விளைவுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information