முடக்கு வாதத்திற்கு ஊசி மூலம் உட்செலுத்தும் தங்க சிகிச்சை

18-ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு ஊசி மூலம் உட்செலுத்தும் தங்க சிகிச்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு நான்கு சோதனைகளையும் 415 நோயாளிகளையும் உள்ளடக்கியது. போலி சிகிச்சை பெற்ற நோயாளிகளோடு ஒப்பிடுகையில் ஊசிகள் மூலம் தங்க சிகிச்சை பெற்றுக் கொண்ட நோயாளிகளில் 30 சதவீதம் வரை மூட்டு வீக்கங்கள் குறைந்திருந்தன. ஊசிகள் மூலம் தங்க சிகிச்சை பெற்றுக் கொண்ட நோயாளிகளில், இரத்த சோதனையிலும் மற்றும் நோயாளி மற்றும் மருத்துவர் மதிப்பீடுகளிலும் மேம்பாடுகள் காணப்பட்டன. போலி சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளிகளின் 4 சதவீதத்தினரை ஒப்பிடுகையில் தங்க சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 22 சதவீதத்தினர் நச்சியல்பு காரணமாக விலகினர்.

மோசமான தீங்குகள் காரணமாக ஊசி மூலம் உட்செலுத்தும் தங்க சிகிச்சையின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டாலும், முடக்கு வாதம் கொண்ட நோயாளிகளில் குறுகிய-கால சிகிச்சைக்கு ஒரு முக்கியமான மருத்துவ மற்றும் புள்ளியியல் ரீதியில் குறிப்பிடத்தகுந்த நன்மையை அது கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information