மலேரியாவை தடுக்கும் வண்ணம், மலேரியா அதிகம் பாதிக்க கூடிய இடங்களில் பூச்சிக்கொல்லியால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைக்குள் தூங்குவது பரிந்துரைக்கப் படுகிறது. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் மலேரியாவின் மோசமான விளைவுகளை குறைக்க இவை பரவலாக ஊக்குவிக்கபடுகிறது . பூச்சிக்கொல்லிகளால் பதப்படுத்தப்பட்ட கொசு வலைககள் குழந்தைகளின் இறப்பு மற்றும் மலேரியா நோய் நிகழ்வுகளை குறைக்கும் என்று சிறந்த தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளின் திறனாய்வு கூறுகிறது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு