சிக்கல் அற்ற மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் மருந்துகள்.

ஆர்டிமிஸினின் முதலாவதாக ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து. இது பண்டை காலத்தில் இருந்தே காய்ச்சல் மற்றும் மலேரியாவுக்கு சீனாவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய மருந்து ஆகும் . இந்த மருந்துகள் விரைவாக செயல்படுவதோடு மிகக்குறைவான பக்க விளைவுகள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆர்டிமிஸினின் மருந்துகளுக்கு மலேரியா ஒட்டுண்ணிகள் எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. இரத்தத்தில் இருந்து மலேரியா ஒட்டுண்ணிகளை அழிப்பதில் ஆர்டிமிஸினின் மருந்துகள் மற்ற வழக்கமான மருந்துகளை விட திறம்பட செயல்படுகின்றன என்று இந்த திறனாய்வு காட்டுகிறது. ஆனால் மலேரியா ஒட்டுண்ணிகள், இப்பொழுது உள்ள மருந்துகளுக்கு அதிகமான எதிர்ப்புத்தன்மையினை வளர்த்துள்ள, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் ஆர்டிமிஸினின் நீடித்த ஒட்டுண்ணி அகற்றும் திறன் குயினைன் அல்லது மெஃபெலோகுயின் போன்ற வழக்கமான சிகிச்சையை விட சிறந்ததாக தெரியவில்லை.நீண்டநாள் செயல்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தான மெஃபெலோகுயினை ஆர்டிமிஸினினுடன் சேர்த்து பயன்படுத்தி அளிக்கப்படும் கூட்டு சிகிச்சை நீடித்த ஒட்டுண்ணி அகற்றும் திறனை மேம்படுத்துகிறது. ஆனால் மெஃபெலோகுயின் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மெஃபெலோகுயினை விட பாதுகாப்பான நெடுநாள் செயல்படும் மலேரியா எதிர்ப்பு மருந்துகளை சேர்த்து அளிக்கப்பட்ட கூட்டு சிகிச்சை பற்றிய சில ஆய்வுகள் உள்ளன .பல்வேறு ஆர்டிமிஸினின் வழி மருந்துகளில் ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று அறிய ஆய்வுகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information