முதன்மை மூளிமேற்சவ்வின் மேலான (supratentorial) மூளைய உட் குருதிப்போக்குக்கான (intracerebral haemorrhage) அறுவை சிகிச்சை

மூளையில் இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தின் பின் உருவாகும் குருதியுறைவை சத்திரசிகிச்சை மூலம் நீக்குவதன் நன்மை பற்றி ஆதாரம் உள்ளது.பெரும்பாலான பக்கவாதங்கள் மூளையின் ஒரு பகுதிக்குரிய ஒரு தமனியில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஏற்படுகின்றன; இவை குருதித் தடையால் ஏற்படும் பக்கவாதம் என அழைக்கப்படுகின்றன.சில பக்கவாதங்கள் குருதிக் குழாயிலிருந்து குருதியானது மூளையினுள் கசிந்து அங்கே உறைவதனால் உருவாகின்றன; இது மூளை இரத்தப்போக்கு எனப்படுவதோடு உயிர் , அவயங்கள் மற்றும் பேச்சு ஆகியவற்றை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் ஒரு நிகழ்வுமாகும்.பக்கவாதத்தின் பின்னர் நோயாளிகளின் உயிரோடிருத்தல் மற்றும் பிறர் தயவின்றி இருத்தலின் சாத்தியத்தை மேம்படுத்தும் இலக்குடன் குருதியுறைவை நீக்குவதற்கு பல வகையான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம்.நோய்க்குறிகள் தோன்றி 24 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை இறப்பு அல்லது தங்கியிருத்தல் பற்றிய ஆபத்தை குறைக்கின்றதா மற்றும் ஒரு குறிப்பிட்ட சத்திரசிகிச்சை முறை மற்றையதை விட சிறந்ததா என்பவற்றை தீர்மானிக்க மீளாய்வு ஆசிரியர்கள் முடிவெடுத்தார்கள்.என்டோஸ்கோபி(Endoscopic) அல்லது இடஅமைவுசார் சத்திரசிகிச்சை (stereotactic surgery) என்பன குருதியுறைவை அடைவதற்கு மண்டையோட்டை திறத்தலை (craniotomy) விடுத்து நுண்ணிய குழாய்களை உட்செலுத்துகின்றன.இந்த நிகழ்பதிவாக்கம் செய்யப்பட்ட மீளாய்வானது மருத்துவ சிகிச்சை பெற்ற 2059 பங்கேற்பாளர்களுடனான 10 ஆய்வுகளை உள்ளடக்கியிருந்ததோடு அவர்களில் 50% பேர் நிகழ்வு நடைபெற்று 72 மணித்தியாலங்களுக்கிடையில் சத்திரசிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.சத்திரசிகிச்சையானது குறிப்பிடத்தக்களவு நன்மையுடன் சம்பந்தப்பட்டிருந்ததுடன் உயிருடன் மற்றும் பிறர் தயவின்றி இருக்கும் பங்கேற்பாளர்களின் பங்கை மேம்படுத்தியது.எனினும் நன்மையானது எல்லா ஆய்வுகளிலும் சீராகக் காணப்படவில்லை என்பதோடு, இந்த ஆய்வு முடிவானது பெரிதும் நம்பத்தகுந்ததல்ல என்பதை உணர்த்துகின்றது.ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சத்திரசிகிச்சை நம்பிக்கையளிப்பதாகத் தோன்றியது. ஆனால் சத்திரசிகிச்சையினால் நன்மையடையக்கூடிய நோயாளர் வகையினை அடையாளங்காண மேலதிக சோதனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information