கடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பரோட்டசைக்கிளின் (protacyclin) மற்றும் ஒத்தப்பொருட்கள்

மூளையின் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யக் கூடிய பரோட்டசைக்கிளின் (prostacyclin) மற்றும் அதன் தொடர்புடைய மருந்துகள், இரத்த கட்டிகளால் ஏற்படுகின்ற பக்கவாதத்திற்கான ஆரம்பநிலை சிகிச்சைக்கு எந்த நன்மையையும் தரவில்லை . இரத்தக்கட்டியினாலேயே பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது .பின்னர் அது மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது . மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமையால் , விரைவில் மூளை சேதம் ஏற்படலாம்.இது பெரும்பாலான நேரங்களில் நிரந்தரமான சேதமாகிறது . மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் மூளை சேதமடைவதைக் குறைக்கவும் பக்கவாதத்திற்கு பிந்தைய விளைவுகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. Prostacyclin மற்றும் அதன் தொடர்புடைய மருந்துகள் மூளையின் இரத்தத்தின் பாகுத்தன்மையை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் உள்ளவை . இந்த வகையான மருந்துகள் பக்கவாதத்திற்கு பிந்தைய விளைவுகளை குறைக்குமா என்று இந்த திட்டமிட்ட திறனாய்வு மதிப்பீடு செய்கிறது . 5 சிறிய ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. அவற்றை ஒன்றுசேர்த்து பார்க்கையில்அது எந்த பயனும் அளிப்பதாக தெரிவிக்கவில்லை. குறைவான தரவுகளே இருப்பதனால் தற்போது பரோட்டசைக்கிளின் (protacyclin) மற்றும் ஒத்த மருந்துகளை கடுமையான (acute) பக்கவாதத்திற்கு பரிந்துரைக்க இயலாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information