மிகுந்த மாதவிடாய் இரத்த போக்கிற்கு வாய் வழி கருத்தடை மாத்திரைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

யுனைடட் கிங்டம் போன்ற நாடுகளில் மகப்பேறு மருத்துவர்களின் பரிந்துரைக்கு மிகுந்த மாதவிடாய் இரத்த போக்கு ஒரு பொதுவான காரணமாகும். இது ஒரு வலுவிழக்கச் செய்யும் சமூக மற்றும் ஆரோக்கிய பிரச்னையாகும், மற்றும் இது இரத்த சோகைக்கு வழி வகுக்கக் கூடும். வாய் வழி கருத்தடை மாத்திரை, மாதவிடாய் சுழற்சி மற்றும் மெல்லிய கருப்பை சுவர் படலம் (மாதவிடாயின் போது பிரியும் கருப்பை உட்படலம்​) மேல் ஒரு கட்டுபாட்டை வழங்கக் கூடும். மாதவிடாய் இரத்த இழப்பை மாத்திரை குறைக்கும் என்று இந்த திறனாய்வு காட்டியது, ஆனால், பிற மருந்துகளை ஒப்பிடுகையில் இதன் மதிப்பை தீர்மானிப்பதற்கு போதுமான தரவு இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.