மனச்சிதைவு நோய் (Schizophrenia)க்கு குடும்பம்சார் இடையீடு

தமது உணர்ச்சிகளை குறைவாக வெளிப்படுத்தும் போக்கு கொண்ட குடும்பங்களுடன் ஒப்பிடுகையில், வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள்(ஆத்திரம், விமர்சனம் அல்லது மிகை ஈடுபாடு) குடும்பத்தினுள் உயர் அளவில் உள்ள போது, மனச்சிதைவு நோய் (Schizophrenia) உள்ள மக்கள் குடும்ப குழுக்களினுள் பழைய நிலைக்குத் திரும்ப அதிக சாத்தியகூறு உள்ளது.

குடும்பங்களினுள் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகளைக் குறைப்பதற்கு கல்வி ஆதரவு மற்றும் மேலாண்மை சம்பந்தப்பட்ட உளசமூக ரீதியான தலையீடுகள் உள்ளன.இந்த மீளாய்வில் நாங்கள் மனச்சிதைவு நோய் அல்லது மனச்சிதைவு நோயை ஒத்த நோய் பாதிப்புள்ள மக்களின் பராமரிப்புக்கான சமூக அமைப்புக்களில் குடும்பம்சார் உளசமூக தலையீடுகளின் விளைவுகளை ஒப்பிடுகிறோம்.<br>⏎⏎<br> ஆராய்ச்சி வடிவமைப்பில் எந்த தெளிவான வேறுபாடுகளும் இல்லை என்றாலும் ஆய்வுகளுக்கிடையே வேறுபடுகின்ற குடும்பம்சார் தலையீடுகளடங்கிய தொகுதிகளுடன் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன ,.குடும்பம்சார் தலையீடானது, நோய் மீளத் தோன்றும் ஆபத்தை குறைப்பதோடு மருந்துகளை சரியாக உள்ளெடுப்பதை மேம்படுத்துவதையும் முடிவுகள் சுட்டிக்காட்டின. இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தரவுகள் போதிய அளவில் இல்லாமையினால் அவை பயனற்றவையாக உள்ளன. இப் பராமரிப்பு தொகுதியானது பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், பெரும்பாலான குறுங்கால மற்றும் நீண்டகால விளைவுகளை முறையாக தெளிவுபடுத்த மேலதிக ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information