Skip to main content

தாய்வழி உயர் இரத்த அழுத்தம் அல்லது குறைபாடற்ற கரு வளர்ச்சிக்கு அடிவயிற்று சுருக்க சிகிச்சை.

அடிவயிற்று சுருக்க நீக்கம் முதன்முதலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் பிரசவ வலியின்போது கருப்பை முன்நோக்கி இயங்குவதால் வலியை நிவாரணம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. வயிற்றுப்பகுதி முழுவதும் ஒரு கடுமையான மூடப்பட்ட குவிமாடம் வைக்கப்படுகிறது, வயிற்றுப்பகுதியில் சுருக்கம் நீங்க, 3௦ நிமிடம் ஒரு முறை முதல் ஒரு நாளில் மூன்று தவணையில், 15 முதல் 30 வினாடிகள் வரை -50 முதல் -100 mm Hg அளவு அழுத்தம் தரப்படும், அல்லது தொடர்ச்சியாக பிரசவம் முழுவதும் செய்யப்படுகிறது. கவனித்ததில் கருவின் நல்வாழ்வு மேம்பட்டதாகக் காணப்படுகிறது, ஆனாலும் அதன் ஆராய்ச்சியில் பிரசவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும் முடிவிற்கு வழிசெய்கிறது.

மொத்தமாக 356 கர்ப்பிணி பெண்களுடன் மூன்று சீரற்ற கட்டுப்பாட்டு ஆய்வுகள் மருத்துவ இலக்கியத்தின் தேடலில் இருந்து அடையாளம் காணப்பட்டன, இவை அனைத்துமே கடுமையான ஆராய்ச்சி் வரம்புகளைக் கொண்டுள்ளன. 1967 க்கும் 1973 க்கும் இடையிலான ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆயவு, முன்-எக்லாம்சியா, அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம், அல்லது நாட்பட்ட நெப்ரிட்டிஸ் ஆகியவை உடைய பெண்களை கொண்ட ஆய்வாகும். மற்ற இரண்டு சோதனைகளில், சிறு வயதிற்குட்பட்ட கர்ப்பக்கால குழந்தைகளை சுமந்து செல்லும் பெண்களை அடிவயிற்று சுருக்க நீக்கம் அல்லது சுருக்கநீக்கம் இல்லாத நிலையில் இருந்தனர்.

அடிவயிற்று சுருக்கம் முன்-எக்லாம்சியா முன்னேற்றத்தின் மீது சாதகமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஒரு சோதனை கூடுதலாக பிரசவ வலியின்போது குறைவான கருச்சிதைவை பதிவிட்டுள்ளது, மற்றும் வயிற்று சுருக்கம் பெற்ற சிகிச்சை குழுவில் குறைவான 1 நிமிட அப்கார் ஸ்கோர் பதிவிட்டுள்ளது. பிறப்பு எடையில் வெளிப்படையான பெரிய முன்னேற்றமும், மற்றும் பிறப்பு சார்ந்த மரணங்களில் முன்னேற்றமும் இந்த மூன்று ஆய்வுகளில் குறிப்பிட்ட பதிவானது அடிவயிற்று சுருககத்தை ஆராய குறைபாடுடைய கரு வளர்ச்சியுள்ள நோயாளிகள் மத்தியிலும், ஒருவேளை முன்-எக்லாம்சியா கொண்ட பெண்களிடமும், இந்த சிகிச்சை உத்தரவாதத்திற்கு போதுமான முடிவுகளை முறையான சிகிச்சை ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறையான குறைபாடுகள் காரணமாக, அடிவயிற்று சுருக்க சிகிச்சை பயன்பாடு தற்போதைய சோதனைகளின் அடிப்படையில் ஆதரிக்கப்பட முடியாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Citation
Hofmeyr GJ. Abdominal decompression for suspected fetal compromise/pre-eclampsia. Cochrane Database of Systematic Reviews 2021, Issue 6. Art. No.: CD000004. DOI: 10.1002/14651858.CD000004.pub2.