கிரிமியன் காங்கோ விஷக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரிபாவிரின்.

இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

கிரிமியன் காங்கோ விஷக் காய்ச்சலுக்கு ரிபாவிரின் சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சையாகக் இருக்கு்மோ என்று ஆரய இந்த கொக்ரான் ஆய்வுக்கான நோக்கமாகும். கோக்ரன் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையாக அனைத்து தொடர்புடைய ஆய்வுகள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். நாங்கள் 23 ஆய்வுகள் கண்டோம். இந்த ஆய்வின் நோக்கதிற்கு பதில் தரும் ஐந்து ஆய்வுகளை சேர்த்துள்ளோம். சான்றுகளின் வரம்புகளை விவரிக்க உதவும் மற்ற 18 படிப்புகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்.

முக்கிய செய்திகள்

கிரிமியன் காங்கோ விஷக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில் ரபிவிரின் சிறந்ததா என்பதைத் தெரிவிக்க போதுமான நம்பகமான ஆதாரங்கள் இல்லை. ஒரு சீரற்ற மருத்துவ சோதனை இந்த கேள்வியை பதிலளிக்க உதவும்.

இந்த ஆய்வு எதை திறனாய்வு செய்தது?

கிரிமியன் காங்கோ விஷக் காய்ச்சல் (CCHF) உண்ணிகள் கடிப்பதால் பரவுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், குறிப்பாக துருக்கியிலும், கிழக்கு ஐரோப்பாவின் பகுதியிலும் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இத்தகைய தொற்றுகள் உயிரை பாதிக்கக்கூடியதாகும். இந்த விஷக் காய்ச்சலால் பாதிகப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதற்கான மிக முக்கியமான வழி, அவர்களை மருத்துவமனையில் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும், அவர்களுக்கு தேவைப்படும் எந்த திரவம் அல்லது இரத்தப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.

CCHFற்கு சிகிச்சையளிக்க சில மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்த தான் ரிபாவிரின். இது பரவலாக கிடைக்கும் மற்றும் பொதுவாக வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. CCHF சிகிச்சைக்காக ribavirin தேவைப்படுமா என்பது பற்றி விவாதம் உள்ளது; சிலர் இது ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கலாம் அல்லது ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் உதவுவதாக சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் இறப்பிற்கான ஆபத்து, மருத்துவமனையில் தேவையான நேரத்தின் நீளம் மற்றும் மருந்துகளிலிருந்து வரும் தீங்கு ஆகியவற்றின் காரணமாக எந்தவொரு விளைவுகளும் இல்லை என்று கூறுகின்றனர்.

மொத்தத்தில், எல்ல ஆய்வு வடிவமைப்புகளும் ribavirin சிகிச்சை தவிர்த்து மற்ற சிகிச்சை முறைகளின் பலனை எடுத்தக்காட்டவில்லை, கூடுதலாக இந்நோயின் தாக்கத்தின் போது நோயாளியின் நிலையை விவரிக்கவில்லை, அல்லது நல்ல மருத்துவ உதவி வழங்கியப்போதும் நோயாளியின் நிலையை விவரிக்கவில்லை. இது ribavirin மற்றும் குறைந்த இறப்பு விகிதத்தின் கூட்டில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

நோயாளியின் மரணத்திற்கு ribavirin காரணமா இல்லையா எனற முக்கிய காரனத்தை விளக்கும் ஐந்து முக்கிய ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற நோயாளிகள் எவ்வளவு நோயுற்று இருந்தனர், என்னென்ன கவனிப்பு பெற்றனர், நோயுற்றிருந்த காலத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் மருத்துவ உதவி பெற்றனர் ஆகிய தகவல்கள் இருந்தன. இந்த ஆய்வில் சேர்கப்பட்டுள்ள படிப்புகள் அனைத்தும் துருக்கி மற்றும் ஈரானில் நடத்தப்பட்டவை, மேலும் CCHF க்கு ribavirin அல்லது ஆதரவான சிகிச்சையையும் மற்றும் ஆதரவான சிகிச்சையை பெற்றவர்கள் மாத்திரம் இருந்தனர். CCHF ற்கு ரீபவாரின் பயன்படுத்துவதில் ஐந்து வித்தியாசமான விளைவுகளை நாங்கள் பார்த்தோம். இதில் ரீபவாரின சிகிச்சை சிறந்ததா என்பதை தீர்மானிக்க போதுமான நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று கண்டோம்.

இந்த ஆய்வு எவ்வளவு புதியது?

ஆயவின் ஆசிரியர்கள் 16 அக்டோபர் 2017 வரை வெளியிடப்பட்ட ஆயவு ஆதாரங்களை தேடியுள்ளனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வெங்கடேஷ் P, ஜாபெஸ் பால்]

Tools
Information