ஒட்டு தன்மையுள்ள இழைம உறை வீக்கத்திற்கான (உறைந்த தோள்பட்டை) மின்னாற்றல் சிகிச்சை முறைகள்

பின்புலம்

வலி மற்றும் விறைப்புத்தன்மைக்கு, உறைந்த தோள்பட்டை ஒரு பொதுவான காரணமாக உள்ளது. வலி மற்றும் விறைப்புத்தன்மை விட்டு செல்லுவதற்கு முன், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும், மற்றும் ஆரம்ப கட்டங்களில் மிகவும் வேதனையாக இருக்கக் கூடும்.

மின்னாற்றல் சிகிச்சை முறைகள் (மேலும், மின்னுடலியல் முகவர்கள் என்றும் அழைக்கப்படும்) வலியை குறைக்கவும், ஆற்றலை (மின், ஒலி, ஒளி, வெப்பம்) அதிகரித்து அதன் மூலம் செயற்பாட்டை மேம்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ள இயன் முறை சிகிச்சை வகைகள் ஆகும். சிகிச்சைக்கான மீயொலி (அல்ட்ராசவுண்ட்), குறைந்த-அளவு லேசர் சிகிச்சை (எல்எல்எல்டி), இன்டெர்பெரேன்சியல் மின்சாரம், தோலினுாடாக மின் நரம்பு தூண்டுதல் (டென்ஸ்) மற்றும் தொடர்ச்சியற்ற மின்காந்த சிகிச்சை முறை (பிஇஎம்எப்) ஆகியவை எடுத்துக் காட்டுகள் ஆகும். பிசியோதெரபிஸ்ட்கள், சிரோப்ராக்ட்டர்கள் மற்றும் அஸ்டிடோபத்ஸ் உட்பட பல்வேறு மருத்துவர்களால் மின்னாற்றல் சிகிச்சை முறைகள் வழங்கப்படுகிறது. நடைமுறையில், உறைந்த தோள் கொண்ட நோயாளிகள் மற்ற இயன் முறை சிகிச்சைகளோடு (உதாரணமாக கையீட்டு சிகிச்சை, உடற்பயிற்சி) அல்லாமல், தனியான ஒற்றை மின்னாற்றல் சிகிச்சை முறையை அரிதாக பெறுவார்கள்.

ஆய்வு பண்புகள்

உறைந்த தோள் கொண்ட மக்களில், மின்னாற்றல் சிகிச்சை முறைகளின் பலன்கள் மற்றும் பாதகங்களைப் பற்றி ஆராய்ச்சியிலிருந்து எங்களுக்கு தெரிவது என்ன என்பதை இந்த மேம்படுத்தப்பட்ட காக்குரேன் திறனாய்வு சுருக்கம் அளிக்கிறது. மே 2014 வரை வெளியான அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, 19 சோதனைகளை (1249 பங்கேற்பாளர்கள்) நாங்கள் சேர்த்துளோம். சேர்க்கப்பட்டிருந்த பங்கேற்பாளர்களில், 61% பெண்களாய் இருந்தனர், அவர்களின் சராசரி வயது 55 ஆண்டுகள், மற்றும் மருத்துவ நிலைமையின் சராசரி காலம் 5.5 மாதங்கள் ஆகும். மின்னாற்றல் தலையீடுகளின் விநியோக காலம் சராசரியாக நான்கு வாரங்களாக இருந்தது.

முக்கிய முடிவுகள்-எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சியை, போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சியோடு ஒப்பிடும்போது

வலி (அதிக புள்ளிகள் என்றால் மோசமான வலி என்று அர்த்தம்)

எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களுக்கு, போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களை விட குறைவான வலி இருந்தது- சிகிச்சையின் நான்காம் வாரத்தில், வலி 19 புள்ளிகள் குறைவாக இருந்தது (15 முதல் 23 புள்ளிகள் வரை குறைவு), (19% முழுமையான முன்னேற்றம், 15% முதல் 23% வரை)

-எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 32 புள்ளிகளாக பதிவிட்டனர்.

-போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 51 புள்ளிகளாக பதிவிட்டனர்.

செயல்பாடு பலவீனம் (அதிக புள்ளிகள் என்றால் மோசமான செயல்பாடு பலவீனம் என்று அர்த்தம்)

எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களுக்கு போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களை விட குறைவான செயல்பாட்டு பலவீனம் இருந்தது- சிகிச்சையின் நான்காம் வாரத்தில், செயல்பாட்டு பலவீனம் 12 புள்ளிகள் குறைவாக இருந்தது (6 முதல் 18 புள்ளிகள் வரை குறைவு), (12% முழுமையான முன்னேற்றம், 6% முதல் 18% வரை)

-எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் செயல்பாட்டு பலவீனத்தை, 36 புள்ளிகளாக பதிவிட்டனர்.

-போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் செயல்பாட்டு பலவீனத்தை, 48 புள்ளிகளாக பதிவிட்டனர்.

புறம் நோக்கிய தோள் தன்னசைவு (அசைவின் டிகிரிகள் அதிகமென்றால் அதிக புறம் நோக்கிய அசைவு என்பதாகும்)

எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களுக்கு போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களை விட அதிகமான புறம் நோக்கிய தோள் தன்னசைவு இருந்தது- சிகிச்சையின் நான்காம் வாரத்தில், புறம் நோக்கிய தோள் தன்னசைவு 9 டிகிரிகள் அதிகமாக இருந்தது (2 முதல் 16 டிகிரிகள் வரை அதிகம்), (5% முழுமையான முன்னேற்றம், 1% முதல் 9% வரை)

-எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களின் புறம் நோக்கிய தோள் தன்னசைவு 79 டிகிரிகளாக இருந்தது.

-போலிசிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்களின் புறம் நோக்கிய தோள் தன்னசைவு 70 டிகிரிகளாக இருந்தது.

பக்க விளைவுகள்

எந்த குழுவிலும் ஒருவரும் எந்த பக்க விளைவுகளையும் அறிக்கையிடவில்லை.

பங்கேற்பாளர்-சுய பதிவிட்ட 30% அல்லது அதிகமான வலி நிவாரணம், சிகிச்சை வெற்றியின் ஒட்டுமொத்த மதிப்பீடு, மற்றும் வாழ்க்கைத் தரம்

இவை, இந்த சோதனையில் அளவிடப்படவில்லை

சான்றின் தரம்

ஆறு நாட்கள் அளிக்கப்பட்ட எல்எல்எல்டி, போலிசிகிச்சையை விட சிகிச்சை வெற்றியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டை மேம்படுத்தக் கூடும் என்பதற்கு தரம் குறைந்த சான்று இருந்தது. மேற்படியான ஆராய்ச்சி மதிப்பீட்டை மாற்ற வாய்ப்பு உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு அளிக்கப்பட்ட பிஇஎம்எப், போலிசிகிச்சையை விட வலி அல்லது செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பதை ஒரு சோதனையிலிருந்த மிக குறைந்த தர சான்றின் காரணத்தினால், நாங்கள் மிகவும் உறுதியற்று இருக்கிறோம்.

எட்டு வாரங்களுக்கு அளிக்கப்பட்ட எல்எல்எல்டி மற்றும் உடற்பயிற்சி போலி சிகிச்சையை விட நான்கு வாரங்கள் வரை வலியையும், மற்றும் நான்கு மாதங்கள் வரை செயல் பாட்டையும் மேம்படுத்துகிறது என்பதற்கு மிதமான சான்று இருக்கிறது. மேற்படியான ஆராய்ச்சி மதிப்பீட்டை மாற்றக் கூடும்.

சிகிச்சைக்கான மீயொலி, பிஇஎம்எப், ஐயோடெக்ஸ் போனோபோரிசிஸ், தொடர்ச்சியான குறுகிய அலை வெப்ப சிகிச்சை, ஐயோடெக்ஸ் ஐயோண்டோ போரிசிஸ் மற்றும் தொடர்ச்சியான குறுகிய அலை வெப்ப சிகிச்சையின் கலவை சிகிச்சை, அல்லது சிகிச்சைக்கான மீயொலி மற்றும் தோலினூடே மின் நரம்பு தூண்டுதல் சிகிச்சை (டென்ஸ்) கலவை சிகிச்சை ஆகியவை உடற்பயிற்சிக்கு சிறந்த துணை சேர்ப்பு சிகிச்சைகளாய் இருக்குமா என்பதை பற்றி நாங்கள் மிக உறுதியற்று உள்ளோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information