அழுத்தப்புண்களை (படுக்கைப் புண்கள்) தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான புண்-பராமரிப்பு குழுக்கள்

பின்புலம்

அழுத்தப்புண்கள் (படுக்கை புண்கள்) என்பவை தோல் அல்லது அதின் அடிப்பகுதி திசுக்களில் ஏற்படும் புண்களாகும். இந்த புண்கள் பொதுவாக, தங்களால் தாங்களே நகர முடியாத மக்களில் ஏற்படக் கூடும். இந்த புண்கள் குணமாவதற்கு கடினமானவையாகும். ஆதலால், முன்னையே இவை ஏற்படுவதை தடுப்பதற்கு முயற்சிப்பதே முக்கியமாகும். எனினும், அவை ஏற்படும் போது, அவற்றை சரிவர நிர்வகிப்பதும் முக்கியமாகும். இத்தகைய புண்களைக் கொண்டிருக்கும் மக்களுக்கு சிறப்பான விளைவுகளை ஒரு புண்-பராமரிப்பு குழு வழங்க வேண்டுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு ஆரோக்கிய வல்லுநரால் ஒரு நபர் நிர்வகிக்கப்படும் இந்த சமயத்தில் தான், பராமரிப்பு ஒப்பிடப்படுகிறது.

திறனாய்வு கேள்வி

அழுத்தப்புண்களை தடுப்பது அல்லது சிகிச்சையளிப்பதின் மேலான புண்-பராமரிப்பு குழுக்களின் தாக்கத்தை கண்டறிய நாங்கள் விரும்பினோம். அழுத்தப்புண்ணை தடுப்பதில் நோக்கமுடைய ஒரு குழுவை உள்ளடக்கிய ஆய்வுகளில் நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். அழுத்தப்புண்களுக்கு சிகிச்சையளிப்பதை நோக்கமுடைய ஆய்வுகளிலும் நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். ஆய்வுகள் எந்த வயது மக்களையும் உள்ளடக்கி இருக்கலாம். பராமரிப்பு வழங்கப்படும் அமைப்பு, மருத்துவமனை, அல்லது மருத்துவ இல்லம் அல்லது ஒரு நபரின் சொந்த வீடு என்று எந்த வகையையும் உள்ளடக்கி இருக்கலாம். அழுத்தப்புண்கள் கொண்ட மக்கள் அல்லது அழுத்தப்புண்கள் உருவாகக் கூடிய அபாயத்தில் உள்ள மக்களை ஆய்வு உள்ளடக்கலாம்.

நாங்கள் கண்டது என்ன

7 ஏப்ரல் 2015-ல் நாங்கள் ஆய்வுகளுக்கு தேடினோம் மற்றும் எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை. இந்த திறனாய்வில் உள்ளடக்குவதற்கு எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணாததால், அழுத்தப்புண்களின் தடுப்பு அல்லது மேலாண்மையை புண்-பராமரிப்பு குழுக்கள் மேம்படுத்துமா என்பதை எங்களால் கூற முடியாது. ஆதலால், அழுத்தப்புண்களின் தடுப்பு மற்றும் மேலாண்மையின் மேலான புண்-பராமரிப்பு குழுக்களின் தாக்கத்தை ஆராய வேண்டியிருக்கிறது.

இந்த திறனாய்வின் ஆதாரம், 7 ஏப்ரல் 2015 வரைக்குமான நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information