பார்க்கின்சன் நோயில் அயர்ச்சிக்கான சிகிச்சை

பார்க்கின்சன் நோய் கொண்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் அயர்ச்சி பற்றி முறையிடுவர். பார்க்கின்சன் நோய் கொண்ட மக்களில், அயர்ச்சியை குறைக்க எந்த சிகிச்சை சிறப்பானது என்பது தெளிவாக தெரியவில்லை.

ஏப்ரல் 2015 வரையிலான மருத்துவ இலக்கியத்தை நாங்கள் திறனாய்வு செய்து, மொத்தம் 1817 மக்களை உள்ளடக்கிய 11 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். ஒன்பது ஆய்வுகள், அயர்ச்சி மேலாக மருந்துகளின் (அதாவது, லேவடோபா-கார்பிடோபா, மேமம்டைன், ரசக்கிளின், காபின், மெத்தில்பெனடைட், மோடபினில் அல்லது டாக்ஸ்பின்) விளைவுகளை கண்டது. இரண்டு ஆய்வுகள், அயர்ச்சி மேலாக உடற்பயிற்சியின் விளைவுகளை ஆராய்ந்தது. புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சையின் விளைவுகளை ஆராய்ந்த எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை.

அயர்ச்சிக்கான ஒரு மருந்து, டாக்ஸ்பின் (ஒரு ஆய்வு, 12 மக்கள், குறைந்த தர ஆதாரம்), அயர்ச்சியை குறைக்கலாம். ஒரு எதிர்-பார்க்கின்சன் நோய் மருந்து, ரசக்கிளின் (ஒரு ஆய்வு, 1176 மக்கள், உயர்தர ஆதாரம்) உடலியல்-அயர்ச்சியின் தீவிரத்தை குறைத்தது அல்லது மட்டுப்படுத்தியது என்று நாங்கள் கண்டோம். பெரும்பாலான மருந்துகள் பாதுகாப்பானவை, எனினும், லேவடோபா-கார்பிடோபா (ஒரு ஆய்வு, 361 மக்கள், உயர் தர ஆதாரம்) வாந்தியை ஏற்படுத்தக் கூடும்.

உடற்பயிற்சி (இரண்டு ஆய்வுகள், 57 மக்கள், குறைந்த தர ஆதாரம்) பார்க்கின்சன் நோயில் அயர்ச்சியை குறைத்தது என்பதற்கு நாங்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.

தற்போதைய ஆதாரத்தின் படி, பார்க்கின்சன் நோய் கொண்ட மக்களில், அயர்ச்சிக்கு சிகிச்சை அளிப்பதற்கு எந்த சிகிச்சை மிகவும் திறன் உடையதாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. பார்க்கின்சன் நோய் கொண்ட மக்களில் அயர்ச்சிக்கு மேலான புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சையின் விளைவுகளை எதிர்கால ஆய்வுகள் ஆராய வேண்டும்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information