நாள்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு யோகாசன பயிற்சிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ் முதுகு வலியுள்ளவர்களுக்கு முதுகு சார்ந்த வலி மற்றும் செயல்பாட்டு திறனை யோகா மேம்படுத்துமா?

பின்புலம்

கீழ் முதுகு வலி ஒரு முக்கியமான உடல் நலப் பிரச்சினையாக உள்ளது. இதில் சிலருக்கு மூன்று மாதங்களோ அல்லது அதற்கு மேலுமோ பாதிப்பு இருக்கும். அந்நிலையில் அது "நாள்பட்ட" என்று கருதப்படும். கீழ் முதுகு வலி சிகிச்சைக்கு சில வேளைகளில் யோகா பயன்படுத்தப்படும்.

தேடல் தேதி

யோகாவுடன் மற்ற சிகிச்சை அல்லது எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாத வயது வந்தவர்களை் (18 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள்) ஒப்பிட்ட ஆய்வுகளை மருத்துவ தரவுத் தளங்களில் நாங்கள் தேடினோம். மற்ற சிகிச்சையுடன் யோகா சேர்த்து பிற சிகிச்சையுடன் ஒப்பிட்ட ஆய்வுகளையும் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்த ஆதாரம் மார்ச் 2016 வரையிலான நிலவரப்படியானது.

ஆய்வு பண்புகள்

மொத்தத்தில் 1080 பங்கேற்பாளர்களைக் கொண்ட 12 ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். 7 ஆய்வுகள் அமெரிக்காவிலும், மூன்று ஆய்வுகள் இந்தியாவிலும் மற்றும் இரண்டு பிரிட்டனிலும் நடத்தப்பட்டது. முதுகு சம்பந்தமான செயல்பாடுகள் அல்லது வலியில் மாற்றங்களை அனைத்து ஆய்வுகளும் அளவிட்டிருந்தன. சில ஆய்வுகள் மட்டுமே வாழ்க்கை தரம் அல்லது மனச்சோர்வு பற்றி தெரிவித்தன. பாதி ஆய்வுகள் மட்டுமே தீங்குகளைப் பற்றி தெரிவித்தன.

ஆய்வு நிதி மூலங்கள்

3 ஆய்வுகள், ஆய்வின் நிதி மூலம் பற்றி தெரிவிக்கவில்லை. ஒரு ஆய்வு எந்த ஒரு நிதியும் பெறவில்லை எனத் தெரிவித்தது . ஒரு ஆய்விற்கு யோகா நிறுவனம் மூலமும், 7 ஆய்வுகளுக்கு தொண்டு நிறுவனம், பல்கலைகழகம் அல்லது அரசாங்கம் மூலமும் நிதி யளிக்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்

7 ஆய்வுகள் யோகவுடன் எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொல்லாமல் இருத்தல், காலதாமதமாக யோகா சிகிச்சை அல்லது நோய் கல்வி ( எ.கா. சிற்றேடு மற்றும் விரிவுரைகள்) போன்ற உடற்பயிற்சி அல்லா சிகிச்சையுடன் ஒப்பிட்டது. 3 ஆய்வுகள் முதுகு சார்ந்த உடற்பயிற்சி அல்லது அதனை போன்ற உடற்பயிற்சித் திட்டங்களுடன் யோகாவை ஒப்பிட்டது. 2 ஆய்வுகளில் மூன்றுசிகிச்சை குழுக்கள் இருந்தன. அதில் யோகா வுடன், உடற்பயிற்சி அல்லாத சிகிச்சை மற்றும் முதுகு சார்ந்த உடற்பயிற்சி ஆகியவை ஒப்பிடப்பட்டன. முதுகு சார்ந்த உடற்பயிற்சியுடன் யோகாவை ஒப்பிட்ட ஒரு ஆய்வில் யோகாவுடன் முதுகு சார்ந்த உடற்பயிற்சி பெற்றவர்களை, முதுகு சார்ந்த உடற்பயிற்சி மட்டும் பெற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டது.

உடற்பயிற்சி அல்லா சிகிச்சையுடன் யோகாவை ஒப்பிடும்போது மூன்று மாதத்தில் முதுகு சார்ந்த செயல்பாட்டு திறனில் மேம்பாடு ஏற்படும் என்பதற்கு குறைந்த- உறுதிப்பாடு உள்ள ஆதாரமும், 6 மாதத்தில் யோகா அனேகமாக சிறந்தது என்பதற்கு மிதமான-உறுதிப்பாடுஉள்ள ஆதாரமும், 12 மாதத்தில் யோகா அனேகமாக சிறிதளவு சிறந்தது என்பதற்கு குறைந்த -உறுதிப்பாடுஉள்ள ஆதாரமும் உள்ளது. 3,6 மற்றும் 12 மதங்களில் வலியில் முன்னேற்றம் இருந்தது என்று குறைவானது முதல் மிதமான-உறுதிப்பாடுடைய ஆதாரம் இருந்தது, ஆனால் அந்த விளைவு மருத்துவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

மூன்று, மற்றும் ஆறு மாதங்களில் முதுகுக்கு பிரத்யோக உடற்பயிற்சியுடன் யோகாவை ஒப்பிடும்போது முதுகு சார்ந்த செயல்பாட்டு திறன் மேம்படுத்துவதில் சிறிய வேறுபாடு அல்லது எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பதற்கு மிக-குறைவான-உறுதிப்பாடு உள்ள ஆதாரம் உள்ளது. 12 மாதங்கள் கழித்து முதுகு சார்ந்த செயல்பாட்டு திறன் மேம்படுத்துவது பற்றிய எந்த தகவலும் இல்லை. முதுகு சார்ந்த உடற்பயிற்சியுடன் இணைந்த யோகாவை முதுகு சார்ந்த உடற்பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டசிகிச்சையுடன் ஒப்பிட்ட ஒரு ஆய்வு (24 பங்கேற்பாளர்கள்) குறைவான- உறுதிப்பாடுகொண்ட ஆதாரங்களை வழங்கியது. அதில் 10 வாரம் யோகாவுடன் உடற்பயிற்சி சேர்த்து அளிப்பது உடற்பயிற்சிமட்டும் அளிப்பதைவிட , முதுகு சார்ந்த செயல்பாட்டு திறன் அல்லது வலிக்கு நன்மை பயக்குமா என்பது உறுதிப்படவில்லை. முதுகு செயல்பாட்டு திறன் மற்றும் வலியின் அளவு 10 வாரம் கழித்து அளக்கப்படவில்லை.

பரிசோதனைகளில் பதிவாகிய மிகவும் பொதுவான தீங்குகள் முதுகுவலி அதிகரித்தது ஆகும். மிதமான-உறுதிப்பாடு கொண்ட ஆதாரம் யோகா செய்வதால் பாதகமான நிகழ்வுகள் வரக்கூடிய ஆபத்துக்கூறு உடற்பயிற்சி அல்லாத சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. குறைவான உறுதிப்பாடுகொண்ட ஆதாரம்படி யோகாவுடன் முதுகுக்கு பிரத்யோக உடற்பயிற்சியை ஒப்பிடும்போது பாதகமான நிகழ்வுகள் வரக்கூடிய ஆபத்துக்கூறு ஒரேமாதிரியாகவே இருந்தது. யோகாவினால் தீவிரமான தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் வர வாய்ப்பு இல்லை.

பிணி சார்ந்த மேம்பாடுகள், வாழ்க்கை தரம்,மனச்சோர்வு மற்றும் இயலாமைபற்றிய தகவல்கள் இல்லை. வேலை தொடர்பான இயலாமை பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.

ஆதாரங்களின் உறுதிப்பாடு

இந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அவர்கள் யோகா பயிற்சி எடுத்தார்களா அல்லது இல்லையா என்பதை அறிந்திருந்தார்கள். இது அவர்கள் தங்களின் செயல்பாட்டுத்திறன், வலி மற்றும் இதர விளைவுப் பயன் அளவீடுகளைப் பற்றி தெரிவிப்பதில் தாக்கம் ஏற்படுத்தி இருக்கலாம். கூடுதலாக, சில ஆராய்ச்சிகள் மிக சிறியவை, சில ஒப்பீடுகளில் சில ஆராய்ச்சிகளே இருந்தது. மற்றும் சில ஒப்பீடுகளில் முரணான முடிவுகள் இருந்தன. ஆகையால் ஆதாரங்களின் உறுதிப்பாட்டை மிதமானது , குறைந்தது அல்லது மிகவும் குறைந்தது என்று தரப்படுத்தினோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு