குறுகிய-கால சுவாச தொற்றுகளின் நிகழ்வு , தீவிரம் அல்லது கால அளவுகளை மாற்றுவதற்கு உடற்பயிற்சி திறனுள்ளதா?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்:பொதுவாக உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறுகிய-கால சுவாச தொற்றுகளின், அதாவது ஒரு மாதத்திற்கும் குறைவாக நீடிக்கும் சளி மற்றும் இருமல்களின் நிகழ்வு, தீவிரம் மற்றும் கால அளவுகளை உடற்பயிற்சி மாற்றக் கூடிய திறன் உடையதா என்பதை அறிய நாங்கள் இந்த திறனாய்வை மேற்கொண்டோம்.

ஆய்வு பண்புகள்:18 மற்றும் 85 வயது வயது வரை உள்ள 904 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட, மற்றும் குறுகிய-கால சுவாச தொற்று அறிகுறிகள் மீது உடற்பயிற்சியின் விளைவை ஆய்வு செய்த 11 சோதனைகளைக் முக்கிய தரவுத்தளங்களில் 2014 ஜூலை வரையிலான தேடல் கண்டறிந்தது. பெரும்பாலான ஆய்வுகளில், உடற்பயிற்சி மேற்பார்வையிடப்பட்டும் மற்றும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமான தீவிர நடவடிக்கைகள் கொண்டு, ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும் இருந்தது.

முக்கிய முடிவுகள்: ஒரு நபரில் ஒரு ஆண்டில் ஏற்படும் குறுகிய-கால சுவாச தொற்றுகள் எண்ணிக்கை மற்றும் இதன் அறிகுறிகளின் தீவிரம், உடற்பயிற்சி செய்த மற்றும் உடற்பயிற்சி செய்யாத குழுக்களில் ஒரே மாதிரியாக இருந்தன. இதேபோல், குறைந்த பட்ச குறுகிய-கால சுவாச தொற்று அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் பின்தொடர் காலத்தில் அறிகுறி நாட்களின் எண்ணிக்கை ஆகியவை உடற்பயிற்சி செய்த மற்றும் உடற்பயிற்சி செய்யாத மக்கள் மத்தியில் ஒரே மாதிரியாக இருந்தன. தொற்று ஏற்படும் அத்தியாயத்தின் நோய் நாட்கள் எண்ணிக்கையை உடற்பயிற்சி குறைக்கிறது என்று நான்கு பரிசோதனைகளின் ஒரு பகுப்பாய்வு கூறியது.

சான்றின் தரம்பரிசோதனைகளின் தரம் மோசமாக இருந்தது அதாவது உடற்பயிற்சியால் நன்மை அல்லது தீமை கூட இருக்கலாம் என்று அர்த்தம்.

முடிவுரை:குறுகிய-கால சுவாச தொற்று நோய்களின் நிகழ்வை, தீவிரத்தை அல்லது கால அளவுகளை உடற்பயிற்சி குறைகிறதா என்பதை புரிந்து கொள்ள நமக்கு குறைவான ஒரு தலை சார்புகளைக் கொண்ட மேற்படியான ஆய்வுகள் வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.