எதிர்திறன் இல்லாத/செயல்படாத passive ரூபெல்லா (German measles) தொற்று ஏற்பட்ட பின்னர் தடுக்க கொடுக்கப்படும் செயல்திறன் குறைந்த முறை (antibodies) கொடுத்தல்.

பின்புலமும் சீராய்வு(review) கேள்வி்:ரூபெல்லா தொற்று நோய் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி உள்ளவர்களுக்கு் இந்த வைரஸ்க்கு எதிராக உடலில் எதிர்ப்பணுக்கள் (antibodies) இரத்ததில் உருவாகியிருக்கும். இந்த எதிர்ப்பணுக்கள் ரூபெல்லா நோய் ஏற்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் தொற்று மீண்டும் ஏற்படாது காக்கும். பாதிப்படைந்த இவர்களிடமிருந்து இரத்த தானம் பெற்று அதிலிருந்து எதிர்சக்தி அணுக்களைப் பெறலாம் (extracion).

உடலில் எதிர்சக்தி அணுக்கள் இல்லாதவர்கள் ரூபெல்லா தொற்று நோய் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு ரூபெல்லா தொற்றுநோய் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு ரூபெல்லா நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ரூபெல்லா தீவிரம் காட்டக்கூடியது. முங்கர்ப்ப காலத்திலுள்ள பெண்களுக்கு ரூபெல்லா நோய் ஏற்பட்டால் குழந்தை இருதயம், கண், காது சம்மந்தமான பிரச்சனைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. ரூபெல்லா நோய் வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படும் மக்களுக்கு இரத்ததானம் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி அணுக்களை தடுப்பூசியாக போடுவதன் மூலம் ரூபெல்லா நோயைத் தடுக்கலாம். இவ்வாறு 1950களிலும் 1960களிலும் பின்பற்றப்பட்டது. இப்போதும் சில சூழ்நிலைகளில் சந்தர்ப்பங்களில் சில நாடுகளில் இம்முறை பின்பற்றபட்டு வருகிறது. இம்முறை பயனுள்ளதா என்ற கேள்விக்கு பதில் இன்னும் தெளிவாக தெரியவில்லை இந்த கேள்விக்கு விடை காண விரும்பி.

ஆய்வின் பண்புகள்: இந்த ஆதாரத்தின் சான்றுகள் ஆகஸ்ட் 2014 வரையிலானது 12 ஆய்வுகள் (430 பங்கேற்பினர்) எடுத்துக் கொள்ளப்பட்டன. உயர் வருவாய் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் அனைத்து வயதினரையும் உள்ளடக்கியது.

11 ஆய்வுகள் (389 பங்கேற்பினர்) தசை மற்றும் நரம்புகளில் நோய் எதிர்ப்பணுக்களை ஊசிமூலம் செலுத்துதல் மற்றும் உப்புத் தண்ணீர் செலுத்துதல் அல்லது எந்த சிகிச்சையும் செய்யாது விடுத்தல் ஆகியவற்றுடன் ஒப்பீடு (compare) செய்தது. இவர்கள் இந்த நோயெதிர்ப்பணுக்களை பெறுவதற்கு 28 நாட்களுக்கு முன்னர் ரூபெல்லா தொற்றுநோய் உள்ளவர்களுடன் தொடர்பு (contact) ஏற்பட்டவர்கள். நோய்த்தடுப்பூசி பெறாதவர்களை விட 39% குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரூபெல்லா தடுப்பு உண்டகிறது. 89% பங்கேற்பவர்கள் கொண்ட 7 ஆய்வுகளில் 5 நாட்கள் மட்டுமே ரூபெல்லா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட பங்கேற்றவர்களுக்கு மிக அதிக/உச்ச தடுப்பு மருந்தினை எடுத்துக்கொண்டதன் மூலம் எந்த மருந்தும் எடுக்காதவர்களை விட 80% குறைவாக நோய்த்தொற்று ஏற்பட்டது. பின்பற்றிய ஆய்வு அணுகுமுறைகள் (methodology) மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பவர்களால் ரூபெல்லா தடுப்பு பற்றிய இந்த ஆய்வுகள் நடுத்தரமுடையது. இன்றைய இரத்ததான முறைகளின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பணுக்களின் அளவு இந்த ஆய்வு முறைகளில் பெறப்பட்ட நோய் தடுப்பு விளைவினைப் பெற இந்த ஆய்வுகளில் கூறப்பட்ட மருந்தின் அளவினை விட கூடுதலாக/மாறுபட்ட அளவினைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

ஒரே ஒரு ஆய்வு மட்டும் கர்ப்பிணி பெண்களைப் பற்றியதாகும் எல்லாப் பெண்களுக்கும் ஏதோ ஒரு ரூபெல்லா தடுப்பு மருந்து இருவித அளவுகளில் அளிக்கப்பட்டது. இந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ரூபெல்லா நோய் ஏற்பட்டதா என அளவிடவில்லை. ஆனால் ரூபெல்லா தொற்றினால் ஏற்படக்கூடிய பிறப்புக் குறைபாடுகள் உள்ளதா என ஆராயப்பட்டது. சம்மந்தப்பட்ட முக்கிய விவரங்கள் காணப்படவில்லை எனவே இந்த ஆய்வின் தரம் தெளிவாக இல்லை. இந்த பெண்களுக்கு பிறந்த எந்த குழந்தைகளுக்கும் ரூபெல்லா சம்மந்தப்பட்ட குறைபாடுகள் இருந்ததாக அறியப்படவில்லை. எப்படியும் இந்த ஒரு ஆய்வின் மூலம் நேரடியான முடிவுகள் எதையும் பெற முடியாது. ரூபெல்லா தொடர்பு ஏற்படுவர்களிடம் தொடர்பு (contact) கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ரூபெல்லா சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது குறித்து நேரடி முடிவுகளை இந்த ஒரு ஆய்வின் மூலம் பெற முடியாது. இந்த பிரிவில் இது குறித்த ஆய்வுகள் மேலும் தேவை.

இந்த ஆய்வுகள் பக்கவிளைவுகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இந்த பாதக விளைவுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வசந்த, ஜாபெஸ் பால்]

Tools
Information