குறைந்த மற்றும், நடுத்தர வருவாய் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்பு

திறனாய்வு கேள்வி

இந்த ஆய்வு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்(உலக வங்கி 2011 ல் வரையறுக்கப்பட்ட) ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்புகளில் விளைவுகளை மதிப்பீடு செய்கிறது). நாங்கள் பின்வரும் விளைவுகளை கருத்தில் கொண்டோம்: முறையே குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக உளவியல்சார் வளர்ச்சி, அவர்கள் மத்தியில் தொற்று நோய்கள் பாதிப்பு வீதம் மற்றும் நோய் நிகழ்வு மற்றும் பெற்றோர்களது பொருளாதார நிலைமை. "மையம் சார்ந்த பகல்நேரக் பராமரிப்பு" என்பது பொதுவாக அனைவரும் அணுகக்கூடிய பெரியவர்கள் மேற்பார்வையின் குழந்தைகலை கவனித்துக் கொள்ளும் இடம் என வரையறைத்துள்ளோம்.

பின்னணி

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், சாதாரண மற்றும் முறைசாரா அமைப்புகள் ஐந்திற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் கணிசமானவர்கள் பெற்றோர்களின் நேரிடையான கண்காணிப்பு இல்லாத முறைசார்ந்த அல்லது முறைசாராத அமைப்பாக உள்ள சிறார் பராமரிப்பு மையங்களில் பகல் பராமரிப்பு சேவைகள் பெறுகின்றனர். மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்பு சேவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பெற்றோர்களது பொருளாதார நிலைமையில் தாக்கத்தை விளைவிக்க கூடும்.

ஆய்வு பண்புகள்

நாங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறார் பராமரிப்பு மையங்களின் விளைவுகளை மதிப்பீடு செய்த ஆய்வுகளை சேர்த்துள்ளோம். சிறார் பராமரிப்பு மையம் சார்ந்த விளைவுகளை தனிமைப்படுத்த உளவியல், மருத்துவம் அல்லது குழந்தை அல்லாத கவனம் இவற்றோடு தொடர்புடைய தலையீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மின்னணு தேடல்கள் மூலம் கிடைத்த 34.902 மேற்கோள்களில், ஒரே ஒரு ஆய்வு மட்டும் நிர்ணயித்த அடிப்படை பண்புகளை சார்ந்திருந்தது. இந்த ஆய்வு கென்யா, உகாண்டா, தன்சானியா/ ஸ்யாந்ஸிபார் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் 256 குழந்தைகள் உட்படுத்தபட்டுள்ளனர். இந்த ஆதாரம் ஏப்ரல் 2014 நிலவரப்படியானவை.

முக்கிய முடிவுகள்

சேர்க்கப்பட்டுள்ள ஒரு ஆய்வு குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியில், சிறார் பாரமரிப்பு மையம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்தது. ஆனால் இந்த ஆய்வு குழந்தைகளின் உளவியல் சமூக வளர்ச்சி, தொற்று நோய்களின் பாதிப்பு, பெற்றோர்களின் தொழில் அல்லது வீட்டு வருமானத்தின் விளைவுகளை வெளியிடவில்லை.

சான்றின் தரம்

இந்த ஆய்வு ஒரே ஒரு ஆராய்ச்சியினை உள்ளடக்கி உள்ளது. அதிலும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பின் அடிப்படையில் தலையீடுகள் ஒதுக்கப்படவில்லை எனவே. ஒப்பீடு குழுக்கள் முக்கியமான பண்புகளில் வேறுபடலாம். எனவே, திறனாய்வின் முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ள வேண்டும். தற்போது செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பெற்றோர்கள் பொருளாதார நிலைமை ஆகியவற்றின்மீது மையம் சார்ந்த பகல்நேர சிறார் பராமரிப்பின் விளைவுகள் தொடர்பாக ஒரு ஏற்புடைய முடிவளிக்க அனுமதிக்கவில்லை என்றாலும், இந்த சேவைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் முக்கியம் இல்லை என்று பொருள் அல்ல. மையம் சார்ந்த சிறார் பராமரிப்பின் திறன் பற்றிய ஆய்வுகளில் இணை தலையீடுகள் இல்லாதவை மிகச் சிலவே, மற்றும் இது போன்ற ஆய்வுகளின் தேவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த திறனாய்வு ஒன்றிணைந்த ஒரு ஜோடி திறனாய்வுகளில் ஒன்று ஆகும். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயர் வருவாய் நாடுகளில் இதனை பற்றிய ஆதாரங்களைக் கண்டறியலாம்.(Van Urk 2014).

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார், மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information