ஆஸ்துமா உடைய வயது வந்தவர்களுக்கு, நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயனுள்ள மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி முறையா?

ஆஸ்துமா என்பது காற்றை கடத்தும் குழாய்களில் அழற்சி மற்றும் சுருக்கத்தால், இடைப்பட்ட அறிகுறிகளை உண்டாக்கி, தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை குறைக்கக்கூடிய ஒரு பொதுவான நிலை ஆகும். சில வயது வந்தவர்கள், உடற்பயிற்சியானது ஆஸ்துமா தாக்குதலை தூண்டும் என்று நம்புகிறார்கள். எனினும், ஆராய்ச்சி எதிர்மாறான காரியத்தை காட்டுகிறது-அது என்னவெனில், உடற்பயிற்சி மேற்கொள்கிற வயது வந்தவர்களுக்கு ஆஸ்துமா தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கக்கூடும் மற்றும் நிலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதை விட நீரில் உடற்பயிற்சி மேற்கொள்வது அதிக பயனுள்ளதாக இருக்கக்கூடும். இந்த திறனாய்வில், ஆஸ்துமா உடைய வயது வந்தவர்களுக்கு நீர்-சார்ந்த உடற்பயிற்சி அளிக்கும் விளைவு மற்றும் பாதுகாப்பை மதிப்பிடுவதை நோக்கமாகக்கொண்டோம்.

நாங்கள் மொத்தமாக, நன்கு-கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமா கொண்ட, சராசரியாக 33 முதல் 36 வயதிற்கு இடையே உள்ள 136 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்று ஆய்வுகளை கண்டுபிடித்தோம். அவர்கள், 40 முதல் 60 நிமிடங்கள் வரை, ஒரு வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை நீர்-சார்ந்த உடற்பயிற்சியை மேற்கொண்டனர்; இந்த திட்டம் இரண்டு ஆய்வுகளில் 10 முதல் 24 வாரங்கள் நீடித்தது, மற்றும் ஒரு ஆய்வில் ஒரே ஒரு நாள் மாத்திரம் நீடித்தது.

நாங்கள், வாழ்க்கை தரம், ஆஸ்துமாவின் பொது அறிகுறிகள் அல்லது ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை அதிகரிப்பு, நுரையீரல் செயல்பாட்டின் அளவு (FEV1,நுரையீரலில் இருந்து மூச்சு வெளிவிடுதலின் முதல் நொடியில் வெளியேற்றப்பட்ட காற்றின் கொள்ளளவு), மற்றும் பாதகமான நிகழ்வுகள் ஆகியவை பற்றிய தரவுகளைக் கருத்தில் கொண்டோம். பங்கேற்பாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள், குறைவான எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள், உடற்பயிற்சியின் கால அளவு மற்றும் தீவிரத்திலுள்ள வித்தியாசங்கள் மற்றும் ஆஸ்துமா நிலையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஆதாரத்தின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலும், நோயாளிகளுக்கு முக்கியமான விளைவுகளை அளவிடுவதற்கு பதிலாக துணை விளைவுகளின் முடிவுப்புள்ளிகள் அளவிடப்பட்டது .

தொகுப்பாக, ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கு நீர்-சார்ந்த உடற்பயிற்சியின் பயன் மற்றும் பாதுகாப்பைப் பற்றி கண்டுபிடிக்க இன்னும் அதிகமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. பங்கேற்பாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைகள், குறைவான பங்கேற்பாளர்கள், உடற்பயிற்சியின் கால அளவு மற்றும் தீவிரத்திலுள்ள வித்தியாசங்கள் மற்றும் ஆஸ்துமா நிலையில் உள்ள வேறுபாடுகள் ஆகியவை நிமித்தமாக ஆதாரத்தின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. நோயாளிகளுக்கு முக்கியமான விளைவுகளை அளவிடுவதற்கு பதிலாக துணைவிளைவுகளின் முடிவுப்புள்ளிகள் அளவிடப்பட்டது.

இந்த எளிய மொழிச் சுருக்கம் தற்போது 13 மே 2014 வரைக்குமானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information