Skip to main content

உடல் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு நேர்முகமான தலையீடுகள்

பற்றாக்குறை அளவிலான உடல் செயல்பாட்டில் பங்கெடுப்பதால், நாட்பட்ட நோய்கள் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கிய பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்க வழி வகுக்கிறது. அனைத்து வயது வந்தவர்களுக்கும், ஒழுங்கான உடல் செயல்பாடு ஒரு இலக்காக இருக்க வேண்டும் மற்றும் அது சமூக, உணர்வு, மற்றும் உடல் ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும். பெரும்பாலான வயது வந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. இந்த திறனாய்வு, 6292 வெளிப்படையாக ஆரோக்கியமாயிருந்த வயது வந்தவர்களை நியமித்த மொத்தம் 10 ஆய்வுகளை சேர்த்துள்ளது. இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகள், சுறுசுறுப்பாக இருப்பதற்கும் மற்றும் கட்டுடன் இருப்பதற்கும் வயது வந்தவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை சிகிச்சை தலையீடுகள், உதாரணமாக, தனிப்பட்ட கலந்தாய்வு மற்றும் ஆலோசனை, பின்னூட்டு, உடற்பயிற்சி விருப்பத் தேர்ந்தெடுப்புகள் வழங்குதல், மற்றும் மேற்பார்வை ஆகியவை வெற்றிகரமாக ஆதரிக்க முடியும் என்று உணர்த்தின. ஒரு குறிப்பிட்ட வகை உடல் செயல்பாட்டை கொண்டு, குழு மற்றும் தனிநபர் அணுகுமுறைகள் கலவையை பயன்படுத்தி ஒரு ஆரோக்கியம் தொழில்முறை-சாராத வல்லுனரால் தலையீடு கண்காணிக்கப்படுவதன் மூலம் விளைவுகள் மேம்பட்டது. புதிய உடல் செயல்பாட்டை குறைந்தது ஒரு ஆண்டு வரை பராமரிக்கலாம் மற்றும் அது, கீழே விழுதல் அல்லது உடற்பயிற்சி தொடர்பான காயங்களை அதிகரிக்காது. எவ்விதமான உடற்பயிற்சி உதவி முறைகள் குறிப்பிட்ட மக்கள் குழுக்களை நீண்ட- காலக்கட்டத்திற்கு அதிக சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதில் சிறந்தது என்பதை நிறுவ அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Citation
Richards J, Hillsdon M, Thorogood M, Foster C. Face-to-face interventions for promoting physical activity. Cochrane Database of Systematic Reviews 2013, Issue 9. Art. No.: CD010392. DOI: 10.1002/14651858.CD010392.pub2.