இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுள்ளவர்களை பாதிக்கும் முழங்கால் பின்புறம் அல்லது முழங்கால் சுற்றியும் (patellofemoral pain) உள்ள வலிக்கான உடற்பயற்சி

முன்னுரை

முழங்கால் சில்லு -முட்டி வலி கூட்டறிகுறி(patellofemoral pain syndrome) (PFPS) இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுள்ளவர்களை பாதிக்கும் ஒரு பொதுவான முழங்கால் மூட்டு பிரச்சனையாகும். PFPS முழங்காற்சில்லுக்கு பின்புறமும் மற்றும் முழங்காற்சில்லுச் சுற்றியும் வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டது. இது பொதுவாக முன்புற முழங்கால் வலி என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் முழங்காலில் வலி முழங்காலை நீட்டும் தசை மீது மாடிப்படி ஏறி இறங்குவது, குத்திட்டு உட்காருவது, சைக்கிள் ஓட்டுதல் அல்லது மண்டியிட்டு உட்காரும்போது அதிக எடை போடுவதால் வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக உடற்பயிற்சி சிகிச்சை பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.

தேடல்களின் முடிவுகள் மற்றும் ஆய்வு விவரம்

மே மாதம் 2014, வரையுள்ள மருத்துவ ஆராய்ச்சிகளை தேடி, முழங்கால் சில்லு-முட்டி வலி (patellofemoral pain) வலியுள்ள 1690 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 31 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் குறிப்பிடத்தக்க இயல்புகள் ( எ.கா. உடல் செயல் அளவுகள் மற்றும் அறிகுறிகளின் கால அளவு) மற்றும் உடற்பயிற்சியின் வகைகள் பற்றிய ஆய்வுகள் பெருமளவு வேறுபட்டிருந்தன. நாங்கள் அனைத்து சோதனைகளையும் ஆய்வு செய்யும் போது அதிக கோடல்(bias) உள்ளதாக கருத்தில் கொண்டு ஆய்வு செய்தோம். ஏனெனில் இந்த ஆய்வுகளில், விளைவுப் பயன்களை சோதித்த நபர்களில் பெரும்பான்மையானவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை கிடைத்திருந்தது என்று அறிந்திருந்தனர்.

இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்ட ஆய்வுகளில் சில ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பீட்டிற்கு பங்களித்துள்ளது மற்றும் இவை பின்வரும் ஆராய்ச்சிகளில் ஒப்பீட்டுக்கான சான்று வழங்கியுள்ளன: உடற்பயிற்சி ஒப்பிடு கட்டுpபாடு சிகிச்சை (10 சோதனைகள்); உடற்பயிற்சி ஒப்பிடு வழக்கமான சிகிச்சை (எ.கா. முழங்கால் மீது ஒட்டும் நாடா (adhesive tape) ஒட்டுதல்-மற்ற சிகிச்சைகளை மதிப்பீடு செய்த 8 சோதனைகள்) மற்றும் உடற் பயிற்சிகள் அல்லது வெவ்வேறு உடற்பயிற்சி திட்டங்கள். வெவ்வேறு உடற்பயிற்சி திட்டங்கள் குழு பின் வருவனவற்றை உள்ளடக்கியது: வீட்டில் உடற்பயிற்சிகள் ஒப்பிடு மேற்பார்வையில் உடற்பயிற்சிகள் (இரண்டு ஆராய்ச்சிகள்); கால் உண்டி (முடப்பட்ட இயக்க தொடர் closed kinematic chain) உடற்பயிற்சிகள் ஒப்பிடு கால் சுதந்தரமாக உடற்பயிற்சிகள் (நான்கு ஆராய்ச்சிகள்); முடப்பட்ட இயக்க தொடர் பயிற்சியின் மாறுபட்ட வடிவங்கள் (வேவ்வேறு ஒப்பிடுகள் செய்த இரண்டு ஆராய்ச்சிகள்); ஏனைய மூடப்பட்ட இயக்க தொடர் வகை உடற்பயிற்சிகள் ஒப்பிடு பல்வேறு வகைப்பட்ட இயல்புடைய இதர பயிற்சிகள் (ஐந்து ஆராய்ச்சிகள் வெவ்வேறு சிகிச்சைமுறைகள் மதிப்பிடுகின்றன); முழங்கால் பயிற்சிகள் ஒப்பிடு இடுப்பு மற்றும் முழங்கால்பயிற்சிகள் (ஏழு ஆராய்ச்சிகள்) முழங்கால் பயிற்சிகள் அல்லது இடுப்பு பயிற்சி (இரண்டு ஆய்வுகள்) அதீ தீவிர பயிற்சி அல்லது தீவிரம் குறைந்த உடற்பயிற்சிகள் (ஒரு ஆய்வு) உடற்பயிற்சி செய்யும் இடம் (நீர் எதிர் நிலம்) அல்லது கால அளவின் திறன். உடற்பயிற்சி செய்யும் இடம் (நீர் அல்லது நிலம்) அல்லது பயிற்சிகால அளவின் திறன் போன்றவற்றில் எந்த சோதனையும் செய்யப்படவில்லை.

சான்றுகளின் தரம்

7முக்கிய விளைவுபயன் ஒவ்வொன்றையும் ஒப்பிடும் ஆய்வுகள் அனைத்தும் மிகவும் குறைந்ததரத்துடன் இருந்தது. அதாவது, இந்த முடிவுகளின் நம்பகத்தன்மையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே இதன் பொருள்.

இரண்டு பெரிய ஒப்பிடுகளின் முடிவுகள்:

கட்டுப்பாட்டு சிகிச்சையுடன் (எந்த சிகிச்சையும் இல்லை) ஒப்பிடுகையில் உடற்பயிற்சி சிகிச்சை செயல்கள் செய்யும்போது உண்டாகும் வலியை நீண்ட கால(மூன்று மாதம் மேலாக ) மற்றும் குறுகிய கால (மூன்று மாதம் அல்லது குறைவாக) நிலையில் மருத்துவரீதியாக முக்கிய விளைவை ஏற்படுத்தும். மேலும், உடற்பயிற்சி சிகிச்சை நோயாளியின் செயல்பாட்டு திறனிலும் நீண்ட மற்றும் குறுகிய கால மருத்துவரீதியான முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் நீண்டகால அடிப்படையில் பல நோயாளிகள் நலம் பெற்றவிட்டதாக கூறினர்.

இத்திறனாய்வில் முழங்கால் பயிற்சிகளை மட்டும் ஒப்பிடும்பொழுது இடுப்பு மற்றும் முழங்கால் சேர்ந்த பயிற்சிகள் நீண்ட மற்றும் குறுகிய கால பொதுவான வலி மற்றும் செயல்பாட்டின்போது வரும் வலியும் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நோயாளிகளின் செயல் திறன் அல்லது நோய் குணமடைதல், இரண்டில் ஏதாவது ஒரு பயிற்சி முறையிலாவது சிறப்பாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை.

முடிவுரை

இந்த திறனாய்வில் உடற்பயிற்சியின் மூலம் நடைமுறை முக்கியத்துவரீதியாக (clinically important) PFPS வலி குறைவதுடன் செயல்பாட்டு திறன் முன்னேற்றம் அடைகிறது என்றும் நீண்ட கால மீட்சியினை துரிதப்படுத்துகிறது என்றும் கூறும் ஆதாரங்கள் தரம் குறைந்ததாக இருந்தாலும் சீரானதாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும், எங்களால் உடற்பயிற்சி சிகிச்சையின் சிறந்த வடிவம் எது என்றும் முழங்கால் சில்லு -முட்டி (patellofemoral) வலி கொண்ட எல்லா மக்களுக்கும் இதனை பயன்படுத்தலாமா என்றும் சொல்ல இயலவில்லை. தனியான முழங்கால் பயிற்சிகளோடு ஒப்பிடுகையில் இடுப்பு மற்றும் முழங்கால் சேர்ந்த பயிற்சிகள் பயனுள்ளதாக இருப்பதாக சில தரம் குறைந்த ஆதாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளுமுன் முன்னுரிமை கேள்விகள் கண்டறியப்படுவதர்க்கும், நோய் கண்டறியும் வழிமுறைகள் மற்றும் விளைவுகளை அளவிடுவதில் ஒருமித்தகருத்தினை ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சி தேவைப் படுகிறது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு:பிறைசூடன் ஜெயகாந்தன், தங்கசுவாமி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information