சமூக அமைப்புகளில் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்கள்

சமூக தணிக்கும் பராமரிப்பு சேவைகளில் தன்னார்வலர்களின் பயன்பாடு, முடிவுகால உடல்நலக் கேடுடைய மக்களுக்கு ஆதரவாக வழங்கப்படும் பரவலான நடவடிக்கைகளை விரிவுப்படுத்தக் கூடும். பயிற்சி மற்றும் ஆதரவின் வகைகள், பெரும்பாலும், அவர்களின் திறனை பாதிக்கக் கூடும் மற்றும் தணிக்கும் பராமரிப்பு தேவைப்படும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை தாக்கம் செய்யும். தணிக்கும் பராமரிப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு செலவு மிகுந்தவையாக இருக்கக் கூடும்.

தணிக்கும் பராமரிப்பு தேவைப்படும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், தன்னார்வலர்கள், மற்றும் சேவை தரம் ஆகியவற்றின் மேல் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு யுத்திகளுடைய விளைவுகளை மதிப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். விரிவாக தேடியும், சேர்ப்பதற்கு தகுந்த எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை. நோயாளிகள், அவர்கள் குடும்பங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தணிக்கும் பராமரிப்பு சேவைகள் மேல் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவின் தாக்கத்திற்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information