பெரியவர்களுக்கான காம்ப்ளெக்ஸ் ரீஜினல் பெயின் சின்ட்ரோமிற்கு எந்த சிகிச்சைகள் பயனுள்ளதாக இருக்கும்?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெயின் சின்ட்ரோம்(சி ஆர் பி எஸ்) பொதுவாக கை அல்லது காலில் விடா வலியுடன் எந்த அடிப்படை காயத்தின் தீவிரத்திற்கும் பொருத்தமற்ற அளவில் அமையும். பொதுவாக இது வீக்கம், நிறமாற்றம், இருக்கம், பலவீனம் மற்றும் தோல் மாற்றங்கள் போன்ற பல்வேறு அறிகுறிகளை உள்ளடக்கும். இந்த நோய்க்குரிய எல்லா சிகிச்சையின் திறனையும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீங்குகளையும் கண்டறிந்து,அனைத்து ஆதாரங்களையும் அறிவிப்பதே இந்த மதிப்பாய்வுரையின் நோக்கமாகும்.

மருந்து சார்ந்த சிகிச்சையிலிருந்து அறுவை சிகிச்சை,புனர்வாழ்வு மற்றும் மாற்று சிகிச்சைகள் உட்பட பல்வேறு சிகிச்சைக்கான ஆதாரங்களை உள்ளடிக்கிய 6 காக்ரேன் திறனாய்வுகள் மற்றும் 13 காக்ரேன் அல்லா திறனாய்வுகள் கண்டறியப்பட்டது. பல சிகிச்சைகளுக்கு குறைந்த அளவிலேயே மருத்துவ ஆராய்ச்சிகள் பிரசுவிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த மருத்துவ ஆராய்ச்சிகள் பலதரப்பட்ட தரத்தில் இருந்தன. பல சிகிச்சைகளின் ஆதாரங்கள் குறைந்த அல்லது மிக குறைந்த தரத்தில் அமைந்துள்ளமையால் இவை நம்பகமான ஆதாரம் என கருத முடியாது.

நாள்தோறும் ஒரு முறை கீட்டமின் மருந்தை சிரைவழியில் உட்கொள்ளுதல் வலியை திறன்பட குறைக்கும் என்று தரம் குறைந்த ஆதாரத்துடன் கண்டறியப்பட்டது, எனினும் இவை பலவகையான பக்க விளைவுகளை உண்டாக்கும். பிஸ்ஃபோஸ்ஃபோனேட் வகை, கால்சிட்டோனின் மற்றும் படிப்படியான இயக்க சார்ந்த் கற்பனை (Graded motor imagery) சிகிச்சை திட்டங்கள் மற்றும் கண்ணாடி சிகிச்சை(mirror therapy) ஆகிய முறைகள் பக்கவாதம் வந்த பிறகு எற்படும் CRPSக்கு எதிராக திறன்பட செயல்படும் என்று நங்கள் தரம் குறைந்த ஆதாரங்கள் மூலம் கண்டறிந்தோம். இயன்முறை சிகிச்சை மற்றும் தொழில்சார் சிகிச்சை மருத்துவ ரீதியாக எந்த ஒரு முக்கியமான பயனையும் ஒரு வருடம் முடிவில் அளிக்கவில்லை மேலும் ஓரிடவுணர்ச்சிநீக்கி முலம் பரிவு நரம்பு தடுப்பும் எந்த பலனும் அளிக்கவில்லை. சிரை வழி பிராந்திய தடை ஏற்படுத்தும் இக்வானதெடின்(guanethidine) திறன்வாய்ந்தது இல்லை என மிதமான தரம்கொண்ட சான்றுகள் உள்ளன மற்றும் அவை சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என காண்கிறது .

மற்ற மருத்துவ முறைகளுக்கு மிக குறைந்த தர சான்றுகள் அல்லது ஆதாரங்களே காணப்படவில்லை. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சிகிச்சைகளின் திறனை பற்றி ஒரு முடிவிற்கு வர இயலாது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் எந்த சிகிச்சைகள் சி.ஆர்.பி.எஸ்(CRPS) நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என உறுதிப்பட கூற இயலவில்லை. எந்த சிகிச்சை முறை சிறந்தது என தீர்க்கமாக பரிந்துரைக்க தரமான மருத்துவ ஆராய்ச்சிகள் இதில் அவசியப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: க. ஹரிஒம், ஜெ.சரவண்குமார் மற்றும் ஐ.சி.பி.என்.அர் குழு