தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு

திறனாய்வு கேள்விவேலை அல்லது வேலை அமைப்பிற்கு வெளியே, கேடுண்டாகும் தூசுகள் அல்லது துகள்களுக்கு (ஆஸ்பெஸ்டாஸ் போன்ற) வெளிப்படுதல், சுவாச நோய்களுக்கு வழி வகுக்கும். இவை தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் என்று அழைக்கப்படும், மற்றும் ஆஸ்பெஸ்டாசிஸ் போன்ற நோய்களை உள்ளடக்கும். தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் கொண்ட மக்கள், உடற்பயிற்சி கொள்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் குறைவுகளை அனுபவிக்கக் கூடும். ஆதலால், இந்த திறனாய்வின் ஆராய்ச்சி கேள்வி இதுவாகும்: தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் கொண்ட மக்களில் உடற்பயிற்சி கொள்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உடற்பயிற்சி பயிற்றுவிப்பு மேம்படுத்துமா?

இந்த திறனாய்வு ஏன் முக்கியம்?தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் கொண்ட மக்களுக்கு வெகு சில சிகிச்சைகளே கிடைக்கப் பெறுகின்றன. பிற நாள்பட்ட சுவாச நோய்களில் உடற்பயிற்சி கொள்திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உடற்பயிற்சி பயிற்றுவிப்பு உதவுகிறது. எனினும், தூசு-சம்பந்தப்பட்ட சுவாச நோய்கள் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு பற்றி இன்னும் சிறப்பாக ஆராயப்படவில்லை.

நாங்கள் கண்ட ஆய்வுகள்மொத்தம் 40 மக்களைக் (ஒரு ஆய்விலிருந்து 35 பேர், மற்றும் இரண்டாவது ஆய்விலிருந்து ஐந்து பேர்) கொண்ட இரண்டு ஆய்வுகளை நாங்கள் உள்ளடக்கினோம். இந்த மக்களில், 21 பேர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பில் பங்கேற்றனர், மற்றும் 19 பேர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பில் பங்கேற்கவில்லை. அனைத்து மக்களும் ஆண்களாவர் மற்றும் அவர்கள் 55 முதல் 86 வருடங்கள் இடையே வயதைக் கொண்டிருந்தனர். இரண்டு உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்களும் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடத்தலைக் உள்ளடக்கின, மற்றும் ஒரு திட்டம், வலிமை பயிற்றுவிப்பு உடற்பயிற்சிகளையும் உள்ளடக்கி இருந்தது. இரண்டு ஆய்வுகளிலும், பயிற்றுவிப்பு, பிரதி வாரம் இரண்டு முதல் மூன்று அமர்வுகளில் பங்கு பெற்ற மக்களுக்கு எட்டு வாரங்கள் வரை நீடித்தது.

முக்கிய முடிவுகள்உடற்பயிற்சி பயிற்றுவிப்பை முடிக்காத மக்களைக் காட்டிலும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பிற்கு பின் உடனடியாக, ஆறு நிமிட நடத்தல் சோதனையில், மக்கள் சராசரியாக 53.81 மீட்டர்கள் கூடுதலாக நடந்தனர். உடற்பயிற்சி பயிற்றுவிப்பை முடிக்காத மக்களைக் காட்டிலும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பிற்கு ஆறு மாதங்களுக்கு பின், ஆறு நிமிட நடத்தல் சோதனையில், மக்கள் சராசரியாக 52.68 மீட்டர்கள் கூடுதலாக நடந்தனர். உடற்பயிற்சி கொள்திறனின் இத்தகைய மேம்பாடுகள், தூசு-சம்பந்தப்பட்ட நுரையீரல் இடைத்திசு நோய் கொண்ட மக்களுக்கும் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட நுரையீரல் ஜவ்வு நோய் கொண்ட மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தன. உடற்பயிற்சி செய்யாதவர்களை ஒப்பிடுகையில் உடற்பயிற்சி செய்தவர்களில் வாழ்க்கைத் தரமும் அதிகமாக மேம்பட்டது. உடற்பயிற்சி பயிற்றுவிப்பு காரணமாக எந்த தேவையற்ற விளைவுகளை அனுபவித்ததாக எவரும் அறிக்கையிடவில்லை

சான்றின் தரம்இரண்டே ஆய்வுகள் மற்றும் 40 மக்கள் மட்டுமே இருந்ததால், ஆதாரத்தின் தரம் மிக குறைவாக இருந்தது. ஆதலால், இந்த கண்டுப்பிடிப்புகள், எதிர்காலத்தின் அதிகமான ஆய்வுகளினால் மாறுவதற்கு சாத்தியமுள்ளது. இந்த காக்ரேன் திறனாய்வின் கண்டுப்பிடிப்புகளை உறுதிப்படுத்துவதற்கு பெரிய ஆய்வுகள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information