அழுத்தப் புண்கள் சிகிச்சைக்கான ஒளிவீச்சு சிகிச்சை

அழுத்தப் புண்கள் என்றால் என்ன?

அழுத்தப் புண்கள் (படுக்கை ரணங்கள் அல்லது அழுத்த ரணங்கள் என்றும் அழைக்கப்படும்) என்பவை தொடர்ந்த அழுத்தம் அல்லது உராய்வின் மூலம் ஏற்படும் காயங்கள் ஆகும். அவை, பொதுவாக அசைவற்று இருப்பவர்கள் அல்லது தாங்களாகவே நகர்வதற்கு சிரமப்படுபவர்கள், உதாரணமாக முதியோர் அல்லது வாதமுடையோர் ஆகியோரை பாதிக்கும். அழுத்தப் புண்கள், பொதுவாக உடலின் எலும்பு பகுதிகளான குதிகால், இடுப்பு, மற்றும் பிட்டம் போன்ற பாகங்களில் ஏற்படும். அழுத்தம் புண்கள் எப்போதும் ஆறுவது இல்லை ,மற்றும் அவைகள் குணமடைந்தாலும், குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்து கொள்ளலாம்.

ஒளிவீச்சு சிகிச்சை என்றால் என்ன?

ஒளிக்கதிர் சிகிச்சை என்பது உடல் பகுதியில் பகல்ஒளியை, அல்லது ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளியை படச்செய்வது.. இது பல்வேறு தரப்பட்ட நோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெளிச்சம் மற்றும் லேசர் கதிர்களை உள்ளடக்கியது. ஒளிக்கதிர் சிகிச்சையால் புண்கள் ஆற எடுத்துக் கொள்ளும் காலஅளவு குறையும் என்ற நம்பிக்கையில் அழுத்தப் புண்கள் சிகிச்சையில் அது பயன்படுத்தபடுகிகிறது.

திறனாய்வின் நோக்கம்

இந்த ஆய்வு வழக்கமான சிகிச்சைமுறையுடன் ஒளிக்கதிர் சிகிச்சை (கள்) கூடுதலாக கொடுக்கப்படும் போது (அதாவது அழுத்த நிவாரணம், காயத்திலிருந்து இறந்த திசு அகற்றுதல், தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் காயத்திற்கு கட்டுபோடுதல் ) அழுத்த புண்கள் குணமடைவதற்கான காலஅளவை குறைக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தது. வழக்கமான சிகிச்சை முறையுடன் ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதை, வழக்கமான சிகிச்சை மட்டும் கொடுப்பதுடனோ அல்லது வழக்கமான சிகிச்சை முறையுடன் ஒரு போலி ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதுடனோ அல்லது வழக்கமான சிகிச்சை முறையுடன் மற்றொரு வகை ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதுடனோ ஒப்பிடலாம்.

இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள்

இந்த ஆய்வின் ஆசிரியர்கள் 2014 ஜனவரி7 தேதி வரையிலான மருத்துவ இலக்கியத்தை தேடி மொத்தம் 403 பங்கேற்பாளர்களை கொண்ட 7 ஆய்வுகளை கண்டறிந்தார்கள் . ஆறு சோதனைகள் ஒளிக்கதிர் சிகிச்சையை வழக்கமான சிகிச்சையுடன் பயன்படுத்துவதை வழக்கமான சிகிச்சை மட்டுமே கொடுப்பதுடன் ஒப்பிட்டுள்ளது ; ஒரு சோதனை வழக்கமான சிகிச்சையுடன் ஒரு போலித் ஒளிக்கதிர் சிகிச்சை கொடுப்பதுடன் ஒப்பிட்டுள்ளது.. ஒரே ஒரு ஆய்வு மட்டும் மூன்றாம் சிகிச்சை குழு கொண்டு வேறுவகையான ஒளிக்கதிர்சிகிச்சையை ஆராய்ந்துள்ளது.

இரண்டு சோதனைகள் அழுத்த புண்கள் முற்றிலும் ஆற எடுத்துக்கொள்ளும் காலஅளவின் தகவல்களை தந்தன , மற்றும் இந்த சோதனைகள் புற ஊதா ஒளி சிகிச்சை பெற்ற ஒளிக்கதிர் குழுவில் உள்ள பங்கேற்பாளர்களின் அழுத்த புண்கள் குணமடையும் காலஅளவில் ஒரு மேம்பாட்டை காண்பித்தது. எனினும், இந்தமுடிவு கவனத்தோடு விளக்கப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் இவை சிறிய, குறைந்த தர சோதனைகளில் இருந்து வந்தவை .மேலும் ஒருநிலைசார்பு பற்றிய தெளிவின்மையும் உள்ளது (அதாவது தவறான முடிவுகளை எடுக்க சாத்தியம் கொண்டவை) மற்றும் கண்டுபிடிப்புகள் சந்தர்ப்பம் காரணமாக இருந்திருக்கலாம். மற்ற பரிசோதனைகள், முரண்பட்ட முடிவுகளை குறிப்பிட்டன அல்லது சோதனைகளின் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் / நேரம் புள்ளிகள் என்ற தகவல்களை குறிப்பிட்டதால் எங்களால் ஒளிக்கதிர் சிகிச்சை அழுத்தப் புண்களை ஆற்றுவதில் பயனுள்ளதாக இல்லையா என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இரண்டு சோதனைகள் பாதகமான விளைவுகளின் நிகழ்வை தெரிவித்தன மேலும் ஒளிக்கதிர் மற்றும் தரமான சிகிச்சை குழுக்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என குறிப்பிட்டன. நான்கு சோதனைகள் நிதியுதவி தகவல்களை வழங்கியுள்ளன.bஇரண்டு தொழில் நிதியில் இருந்தும், மற்றவை ஒரு நிறுவன மானியத்தில் இருந்தும் நிதிஉதவி பெறப்பட்டதாக தகவல்களை தந்தன. வாழ்க்கை தரம் , மருத்துவமனையில் தங்கும் காலம், வலி ​​அல்லது செலவு ஆகியவற்றை பற்றிய தகவல்களை ஆய்வுகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆய்வு அழுத்தப் புண்களுக்கு ஒரு வழக்கமான சிகிச்சையாக ஒளிக்கதிர் சிகிச்சை பயன்படுத்துவதற்கு ஆதரவாக மிகக்குறைவான சான்றுகளை கொடுத்த ஒரு சில, சிறிய ஆய்வுளையே அடையாளம் கண்டது. இந்த சிகிச்சை பயனுள்ளதா மற்றும் பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்யுமுன் மேலும் அதிக சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. அழகுமூர்த்தி மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information