மல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களில் அறிவாற்றல் பிறழ்ச்சிக்கான புனர்வாழ்வு

இது, 'மல்டிபிள் ஸ்கலரோசிஸ்ற்கான நரம்புஉளவியல் புனர்வாழ்வு' (காக்குரேன் நூலகத்தில் முதலில் வெளியிடப்பட்டது, 2011, பிரதி 11) என்ற காக்குரேன் திறனாய்வின் மேம்படுத்துதல் ஆகும்.

மூளை மற்றும் தண்டு வடத்தை சுற்றி அமைந்துள்ள நரம்பு நார்களை பாதுகாக்கும் உறை (நரம்பு கொழுப்பு) சேதம் அடைவதால் ஏற்படும் எந்த ஒரு நிலையும் நரம்பு கொழுப்பு குறைவு நோயாகும். மல்டிபள் ஸ்கேலோரோசிஸ் (எம்எஸ்) நரம்பு கொழுப்பு குறைவு நோய் என்று மிக எளிமையாக கருதப்பட்டு இருந்தது; எனினும் சமீபத்திய ஆராய்ச்சி, நியூரான்ஸ் (நரம்பணுக்கள்) மற்றும் சாம்பல் நிற திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே எம்எஸ்-சின் முக்கிய அம்சங்களாகும் என்று காட்டுகிறது. இவை, ஞாபகம் அல்லது செயல் கூர்மையில் ஏற்படும் குறைவுகளை போன்ற அறிவாற்றல் பிறழ்ச்சியை, நோயின் பிரதானமான அறிகுறிகளில் ஒன்றாக முக்கியப்படுத்துகிறது. அறிவாற்றல் பிறழ்ச்சிகள், எம்எஸ் கொண்ட நோயாளிகளில் 50-60 சதவீதம் வரை பரவலாகக் காணப்படுகிறது. இந்த பிறழ்ச்சிகள், ஒரு நோயாளியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு பல்பரிணாம தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்,மற்றும் இவற்றை, அவர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வில் கருத்தில் கொள்ள வேண்டும். நரம்பு-உளவியல் புனர்வாழ்வு, 1) அறிவாற்றல் பிறழ்ச்சிகளை குறைத்தல், 2) அறிவாற்றல் குறைபாடுகளின் தீங்கு தரக் கூடிய விளைவுகளைக் குறைத்தல், 3) நோயாளிகளின் விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளை அன்றாட வாழ்க்கையில் கருத்தில் கொள்ளக் கூடிய திறனை ஆதரித்தல் என்பன போன்றவற்றில் நோக்கம் கொண்டுள்ளது.

எம்எஸ்-சில் அறிவாற்றல் (நரம்பு-உளவியல்) புனர்வாழ்வின் விளைவுகளை மதிப்பிடுவதே இந்த திறனாய்வின் நோக்கம் ஆகும். அறிவாற்றல் சோதனை செயல்திறன் மற்றும் அன்றாட அறிவாற்றல் செயல்திறன், அத்துடன் மனச்சோர்வு, அயர்ச்சி, தனிமனித பண்பு/நடத்தை இடர்கள், பதட்டம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மேல் புனர்வாழ்வின் விளைவுகளை கருத்தில் கொண்டு நாங்கள் இதை நடப்பித்தோம்.

மொத்தம் 986 பங்கேற்பாளர்கள் (966 எம்எஸ் பங்கேற்பாளர்கள் மற்றும் 20 ஆரோக்கியமான கட்டுபாட்டு பங்கேற்பாளர்கள்) கொண்ட இருபது தொடர்புடைய ஆய்வுகள் கண்டறியப்பட்டு இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டது. எம்எஸ்-இல் நரம்பு-உளவியல் புனர்வாழ்வு அறிவாற்றல் குறைவு அறிகுறிகளை குறைக்கும் என்பதற்கு குறைந்தளவு ஆதாரம் காணப்பட்டது. எனினும், தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, 20 ஆய்வுகளில் 18 ஆய்வுகள் சாதகமான விளைவுகளை காட்டின. அறிவாற்றல் பயிற்சி, ஞாபக திறனையும் செயலாக்க ஞாபகத்தையும் முன்னேற்றியது என்று காணப்பட்டது. அறிவாற்றல் பயிற்சியுடன் இணைக்கப்பட்ட பிற நரம்பு-உளவியல் புனர்வாழ்வு முறைகள், கூர்மை திறன், உடனடி வார்த்தை ஞாபகம் மற்றும் தாமதமான ஞாபகத்தையும் முன்னேற்றியது என்று காணப்பட்டது.

ஆய்வுகளில் இருந்த சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகள் மற்றும் சில செயல்முறையியல் பலவீனங்கள்ஆதாரத்தின் தரத்தை குறைத்தன என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். ஆதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு, சிறந்த-வடிவமைப்பு கொண்ட உயர்-தர ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information