உடல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு சமூக அளவிலான தலையீடுகள்

போதுமான உடல் செயற்பாடு இல்லாமை மிகுந்த ஆரோக்கியக் குறைவிற்கு வழிவகுக்கிறது. ஒழுங்கான உடல் செயற்பாடு நாள்பட்ட நோயின் அபாயத்தை குறைப்பதோடு ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தும். உடல் செயற்பாடின்மை, ஒரு பொதுவான மற்றும் சில நிலைமைகளில் வளர்ந்து வரும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையாகும். இதற்கு தீர்வுக் காண, 33 ஆய்வுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறையை ஒற்றை திட்டத்தில் பயன்படுத்தி, சமூகங்களை நோக்கிய முன்னேற்ற நடவடிக்கைகளை பயன்படுத்தின. இந்த அணுகுமுறை பயனுள்ளதாக இருந்ததா இல்லையா என்பதை காட்டக் கூடிய நல்ல ஆய்வுகளுக்கு பற்றாக்குறை இருந்தது என்பதை நாங்கள் 2011-ல் கிடைத்த ஆராய்ச்சியை முதலில் பார்த்த போது கவனித்தோம். சில ஆய்வுகள், சமூக அளவிலான திட்டங்கள் உடல் செயற்பாடுகளை மேம்படுத்தியது என்றும் மற்ற ஆய்வுகள் இல்லை என்றும் கூறின. இந்த மேம்படுத்தலில், நான்கு நல்ல தரமான புதிய ஆய்வுகளைக் நாங்கள் கண்டோம்; இருப்பினும், இந்த நான்கு ஆய்வுகளில் எதுவும் மக்களின் உடல் செயற்பாடை அதிகரிக்கவில்லை. சில ஆய்வுகள், அதிகமான மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டதை கவனித்தது போன்ற திட்ட நிலை அடிப்படையிலான விளைவுகளை அறிக்கை செய்தது, எனினும் மக்கள் அளவில் உடல் செயல்பாடு அதிகரிக்கவில்லை. சமூக அளவிலான தலையீடுகளை மேற்கொள்வது மிகவும் கடினம் என்பதையும், அவை ​ஒரு மக்கள் தொகைக்கு உடல் செயற்பாடில் ஒரு அளவிடக்கூடிய நன்மையை அளிப்பதில் பொதுவாக தோல்வியடையும் என்று தோன்றுகிறது என்பதையும் இந்த திறனாய்வு கண்டறிந்தது. பல தலையீடுகள் சமூகத்தின் ஒரு கணிசமான பகுதியை அடைய முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது, மற்றும் இணைக்கப்பட்ட சில ஒற்றை உத்திகள் தனிப்பட்ட திறன் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று யூகிக்கிறோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information