உயர் இரத்த அழுத்தம் கொண்ட மக்களுக்கான உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பொதுப்படையான மக்கள்தொகையை ஒப்பிடும் போது, உயர் இரத்த அழுத்தம் கொண்ட மக்கள் இறப்பு மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு உயர்ந்தளவு அபாயத்தை கொண்டிருப்பர். அதிகமான உடல் எடை மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டுக்கும் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கொண்டு, அதிக உடல் எடை மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட மக்களில், உணவுத் திட்ட சிகிச்சை தலையீடுகளால் உடல் எடையை குறைப்பது என்பது முதற்கட்ட சிகிச்சையாக பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், உடல் எடை குறைதல் இரத்த அழுத்தத்தின் மீது ஓர் நீண்ட-கால விளைவைக் கொண்டிருக்குமா மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் பாதகமான விளைவுகளைக் குறைக்குமா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

இந்த பிரச்னைககளுக்கு பதிலளிக்க, உடல் எடையை குறைக்கும் உணவுத் திட்டமுறை கொண்ட மற்றும் அத்தகைய திட்டம் இல்லாத குழுக்களை ஒப்பிடும் சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளால் மட்டுமே முடிவதால், இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வில் அத்தகைய ஆய்வுகளை மட்டுமே நாங்கள் சேர்த்தோம். எட்டு ஆய்வுகளை அறிக்கையிட்ட முப்பது வெளியீடுகள் சேர்க்கை திட்ட அளவையை சந்தித்தன. உள்ளடக்கப்பட்ட எட்டு ஆய்வுகள், 45 முதல் 66 ஆண்டுகள் வரை சராசரி வயதுடைய மொத்தம் 2100 உயர் இரத்த அழுத்தம் கொண்ட பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தன. சிகிச்சையின் சராசரி கால அளவு 6 முதல் 36 மாதங்கள் வரையாகும், மற்றும் இறப்புகள் அல்லது பிற நீண்ட-கால சிக்கல்கள் பற்றி சிறிதளவு அல்லது எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. எட்டில் மூன்று ஆய்வுகள், உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகள் சிஸ்டோலிக் மற்றும் டயாஸ்டாலிக் இரத்த அழுத்தத்தின் அளவை முறையே 4.5மிமி எச்ஜி மற்றும் 3.2 மிமி எச்ஜி அளவு குறைத்தன என்று சிஸ்டோலிக் மற்றும் டயாஸ்டாலிக் இரத்த அழுத்தத்தின் மீதான விளைவுகளை விளக்கி இருந்தன. எட்டில் ஐந்து ஆய்வுகள் உடல் எடையை அறிக்கையிட்டிருந்தன; கட்டுப்பாடுகளைக் ஒப்பிடும் போது, உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகள் உடல் எடையை 4 கிலோ அளவு குறைத்தன. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில், பாதகமான விளைவுகள் பற்றி எந்த பயனுள்ள தகவலும் பதிவிடப்படவில்லை.

முடிவாக, இறப்பு அல்லது நீண்ட-கால சிக்கல்கள் மற்றும் பாதக நிகழ்வுகள் மீதான உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகளின் விளைவுகள் பற்றி எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை. பகுப்பாய்வுகளில் அனைத்து ஆய்வுகளும் சேர்க்கப்படாத காரணத்தினால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை மீதான முடிவுகள் தெளிவற்றதாக கருதப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்