மலேரியா பரவுவதை தடுப்பதற்காக கொசு லார்வாக்களை உண்ணும் மீன்

இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

முதிர்ந்த பெண் அனொஃபெலெஸ் கொசுக்கள் மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளை பரவுகிறது. இந்த கோக்ரன் ஆய்வுக்கான நோக்கமானது, கொசு லார்வாக்களையும் பியுபேக்களையும் (கொசுக்களின் ஆரம்ப வாழ்க்கை நிலைகள்) சாப்பிடும் மீன்களை மக்கள் வாழும் பகுதியிலுள்ள நீர் நிலைகளில் விடுவதால் வயது முதிர்ந்த அனெபிலிஸ் கொசுக்களின் தொகை குறைவதுடன் பிளாஸ்மோடியம் தோற்றால் அவதிப்படும் மக்களின் தொகையும் குறையும் என்பதே.

முக்கிய செய்திகள்

இந்த மீன் வகை, லார்வாக்களையும் பியுபேக்களையும் சாப்பிட நீரில் விடுவதால் மலேரியா தொற்றுள்ள மக்கள் தொகையிலும், வயது முதிர்ந்த அனெபிலிஸ் கொசுக்களின் தொகையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று அறிய இயலவில்லை.

இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்ன?

மலேரியா பரவலாய் இருந்த இடங்களில் மீன்கள் மூலம் கொசு முட்டைகளை சாப்பிடும் ஆய்வுகளையும் கூடவே அனெபிலிஸ் கொசுக்களின வாழ்விடங்களை குறித்த ஆய்வுகளையும் இந்த ஆய்வின் ஆசிரியர்கள் ஆராய்ந்தனர். பதினைந்து சிறிய ஆய்வுகள், Anopheles லார்வா மற்றும் pupae முட்டைகளை சாப்பிடும் மீன்களை குறித்த விளைவை வெவ்வேறு கொசு முட்டைகள் வாழ்விடங்களில் காண்பித்தன, உள்ளூர் நீர் நிலைகள் உட்பட(கிணறுகள், வீட்டு நீர் தொட்டிகள், மீன் குளங்கள், மற்றும் ஏரிகள்; 7 ஆய்வுகள்), அணைகளுக்கு அடியில் உள்ள ஆறுகள் ( 2 ஆய்வுகள்), நெல் விவசாய நிலங்கள்(4 ஆய்வுகள்), மற்றும் நீர் ஓடைகள் (2 ஆய்வுகள்). இந்த ஆய்வுகள் கிழக்கண்ட இடங்களில் செய்யப்பட்டவை, இலங்கை (2 ஆய்வு), இந்தியா (3 ஆய்வு), எத்தியோப்பியா (1 ஆய்வு), கென்யா (2 ஆய்வு), சூடான் (1 ஆய்வு), கரண்டே கோமொரே தீவு (1 ஆய்வு), கொரியா ( 2 ஆய்வு) இந்தோனேசியா (1 ஆய்வு) மற்றும் தஜிகிஸ்தான் (2 ஆய்வு). இது 2013 கோக்ரன் ஆய்வின் புதுப்பிப்பு மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து வெளியிடப்படாத சில பழைய படிப்புகள் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு புதிய விசாரணை ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆய்வின் முக்கிய விளைவுகள் என்ன?

பிரதான ஆய்வில், பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அல்லது முதிர்ந்த வயது அனோபீலஸ் கொசுக்களின் தொகை அல்லது லார்வாவை உண்ணும் மீன்களின் விளைவகளை வெளிபடுத்தும் எந்த ஆய்வு குறிப்புகளை நாங்கள் பார்கவில்லை். லார்வாக்களையும் பியுபேக்களையும் சாப்பிட நீர் நிலைகளில் மீன்களை விடும் இந்த ஆய்வில், முதிர்ச்சியற்ற கொசுக்களின் அடர்த்தி சீரற்ற முடிவுகளை வெளிப்பபடுத்தினது (12 ஆய்வுகள், சேர்க்கப்படாத தகவல், மிக குறைந்த ஆதாரம்) லார்வாக்களையும் பியுபேக்களையும கொண்ட நீர் துவக்கக் நிலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்ட ஒரு சில ஆய்வு குறிப்புகளில், மீன்கள் விடப்பட்ட அநேக நீர் நிலைகளின் எண்ணிகையில் குறைவு ஏற்பட்டது தெளிவாகிறது.(5 ஆய்வுகள், சேர்க்கப்படாத தகவல், குறைந்த ஆதாரம்). சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் எதுவும், கொசு முட்டைகளை தின்னும் மீன்கள் மற்ற உள்ளூர் இனங்களைச் எவ்வாறு சாப்பிடும் என்ற தன்மையை அறிய முற்படவில்லை, ஏனென்றால் இந்த .ஆய்வினை செய்ய இந்த ஆய்வு முறைகள் உருவாக்கப்படவில்லை. சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தும் அதிக பாரபட்ச இடருகள் கொண்டன.

இந்த ஆய்விற்கு அதிக் முதலீடு செய்யப்படும் முன், இவ்வகை மீன்கள் மலேரியா பாதிக்கப்பட்ட மக்களிடமும், மற்றும் .அனோபீலஸ் கொசுக்களின் தொகையிலும் என்ன பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் போதிய எண்ணிக்கையில் தளங்கள் கொண்ட வலுவான கட்டுப்படுத்தப்பட்ட வடிவமைப்புகளை பயன்படுத்த வேண்டும். மேலும், ஆராய்ச்சியாளர்கள் இந்த மீன்களை உபயோகப்படுத்துவதால் உள்ளூர் மீன்களுக்கும், அனொஃபெலெஸ அல்லாத இனங்களுக்கும் உண்டாக்கும் சாத்தியமான தீங்குகளை ஆராய வேண்டும்.

இந்த ஆய்வு எவ்வளவு புதியது?

திறனாய்வாளர்கள் ஜூன் 6, 2017 வரை வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளை தேடி சேர்த்துள்ளனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Tools
Information