ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதல்

மின்னஞ்சல் ஒரு மிக பிரபலமான தொடர்பு சாதன முறையாகும், ஆனால் அது ஆரோக்கிய பராமரிப்பில் மிக பொதுவாக பயன்படுத்தப் படுவதில்லை. மின்னஞ்சலை பயன்படுத்தி, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்வது நோயாளிகளை, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்களை, மற்றும் ஆரோக்கிய சேவைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய நாங்கள் வேண்டினோம். அது எவ்வாறு ஆரோக்கிய அமைப்புகளில் பொருந்த கூடும் என்பதை பற்றியும் அறிய நாங்கள் ஆர்வமாய் இருந்தோம்.

ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதலின் விளைவுகளை கண்ட ஒரே ஒரு ஆய்வை மட்டுமே இந்த திறனாய்வில் நாங்கள் கண்டோம். இந்த ஆய்வு, 327 நோயாளிகள், மற்றும் 159 ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் ஆகியோரை உள்ளடக்கின, மற்றும் மருத்துவர்களுக்கான ஒரு மின்னஞ்சல் நினைவூட்டலையும் வழக்கமான பராமரிப்பையும் ஒப்பிட்டன. மின்னஞ்சல் நினைவூட்டலை பெற்ற மருத்துவர்கள், அதை பெறாதவர்களை காட்டிலும், நடைமுறை வழிகாட்டல்கள்-பரிந்துரைத்த ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையை பெரும்பாலும் வழங்கினர் என்று கண்டது, மற்றும் இது நோயாளி பராமரிப்பை மேம்படுத்தி இருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். கண்டுப்பிடிப்புகள் கலவையாக இருந்தபடியால், நோயாளி நடத்தைகள் அல்லது செயல்கள் மேல் அதின் தாக்கத்தை எங்களால் சரிவர மதிப்பிட முடியாமல் போனது. இந்த ஆய்வு, மின்னஞ்சல் ஆரோக்கிய சேவைகளை எவ்வாறு பாதிக்கும் அல்லது மின்னஞ்சல் தீங்குகளை ஏற்படுத்தக் கூடுமா என்று அளவிடவில்லை. இந்த ஆதாரம் ஆகஸ்ட் 2013 வரை தற்போதையானது.

ஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளுதலின் விளைவுகளைப் பற்றி ஆதாரம் இல்லாதிருப்பதால், இந்த நோக்கத்திற்கு மின்னஞ்சலின் பயன்பாட்டை அளவிட உயர்-தர ஆராய்ச்சி தேவைப்படுகிறது. எதிர்கால ஆராய்ச்சி, மின்னஞ்சல் பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information