மூச்சு குழாய் தளர்ச்சி நோய் (பிரான்க்யக்டேசிஸ்) கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் பாட்டு பாடுவதின் பலன்கள்

மூச்சு குழாய் தளர்ச்சி நோய் (ஒரு தீவிர நுரையீரல் நோய் நிலை) கொண்ட மக்கள், நாள்பட்ட ஈர இருமல், அயர்ச்சி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை உள்ளடக்கிய நெஞ்சு நோய் அறிகுறிகளை கொண்டிருப்பார். காலப்போக்கில், அவர்களின் நுரையீரல் செயல்பாடும் குறையக் கூடும். மூச்சு குழாய் தளர்ச்சி நோய் கொண்ட மக்களில், பாட்டு பாடுதல், நுரையீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மூச்சு குழாய் தளர்ச்சி நோயில், பாட்டு பாடுதலின் பலன்களை பற்றி ஆராய்ந்த எந்த சீரற்ற கட்டுபாட்டு சோதனைகளையும் இந்த திறனாய்வு காணவில்லை. எந்த தரவும் இல்லாததால், மூச்சு குழாய் தளர்ச்சி நோய் கொண்ட மக்களில், பாட்டு பாடுதல் ஒரு பலன்மிக்க சிகிச்சைமுறையா இல்லையா என்று எங்களால் முடிவு செய்ய முடியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information