கர்ப்பக்காலத்தின் ஆரம்பத்தில் குமட்டல் மற்றும் வாந்திக்கான சிகிச்சை தலையீடுகள்

கர்ப்பக்காலத்தின் ஆரம்பத்தில், குமட்டல், வாந்தி முயற்சி அல்லது வறண்ட ஓக்காளிப்பு, மற்றும் வாந்தி ஆகியவை மிகவும் பொதுவானதாகும் மற்றும் பெண்களுக்கு கடும் வேதனை தரக்கூடியதாகும். 'காலை புரட்டல்' கொண்ட பெண்களுக்கு, மருந்துகள், குறைநிரப்பு மற்றும் மாற்று சிகிச்சைகளை உள்ளடக்கும் பல சிகிச்சைகள் இருக்கின்றன. மருந்துகள் எடுத்துக் கொள்வதால் அவை சிசுவின் வளர்ச்சியை தீங்கு விளைவிக்கும் விதத்தில் பாதிக்கக் கூடும் என்ற அக்கறைகளினால், இந்த சிகிச்சைகள் திறன் மிக்கவை மற்றும் பாதுகாப்பானது என்று காணப்பட்டதா என்பதை ஆராய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டது.

எந்த சிகிச்சை தலையீடுகளை பயன்படுத்தலாம் என்பதற்கு ஆதரவளிக்கும் அறிவுரைக்கு, இந்த திறனாய்வு உயர்-தர ஆதாரம் இல்லாமையை கண்டது. கர்ப்பக்காலத்தின் ஆரம்பத்திலிருந்த 5449 பெண்கள் உள்ளடங்கிய 41 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் ஆராய்ந்தோம். குமட்டல் அல்லது வாந்தியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மணிக்கட்டு மீதான P6 புள்ளி மீதான அக்குப்ரஷர், அக்குதூண்டல், அக்குபஞ்சர், இஞ்சி, சீமை சாமந்தி, வைட்டமின் B6, எலுமிச்சை எண்ணெய், புதினா எண்ணெய், மற்றும் அநேக மருந்துகளை உள்ளடக்கிய பல சிகிச்சைகளின் திறனை இந்த ஆய்வுகள் ஆராய்ந்தன. சில ஆய்வுகள், பெண்களுக்கான குமட்டல் மற்றும் வாந்தி அறிகுறிகள் மேம்பட்டன என்று ஒரு நன்மையை காட்டின, ஆனால் பொதுவாக, விளைவுகள் நிலையற்றதாகவும், மற்றும் வரம்பிற்குட்பட்டும் இருந்தன. ஒட்டுமொத்தமாக, ஒதுக்கீடு மறைப்பு மற்றும் அனைத்து ஆய்வு பங்கேற்பாளர்கள் மீதான அறிக்கையிடல் தொடர்புடைய குறைந்த ஒரு தலை சார்பு அபாயத்தை ஆய்வுகள் கொண்டிருந்தன. எனினும், எவ்வாறு பங்கேற்பாளர்கள் குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர் மற்றும் அனைத்து முடிவுகள் முழுமையாக மற்றும் தெளிவாக அறிக்கையிடப்படவில்லை என்ற வழியில் ஆய்வுகளின் சில அம்சங்கள் நிறைவற்று அறிக்கையிடப்படிருந்தன. அநேக ஆய்வுகள், குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறிகளை அளப்பதில் வெவ்வேறு விதமான வழிகளை கொண்டிருந்தன, ஆதலால், இந்த கண்டுப்பிடிப்புகளை ஒரு சேர எங்களால் பார்க்க முடியவில்லை. வெகு சில ஆய்வுகள், தாய் மற்றும் சிசுவின் பாதகமான விளைவுகளை அறிக்கை செய்திருந்தன மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உள்ள சிகிச்சைகளின் திறனிற்கு மிக சிறிய அளவிலேயே தகவல் இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information