மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான மருந்து சிகிச்சை

மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ் (எம்எஸ்) கொண்ட அநேக மக்கள் மனச்சோர்வினால் அவதிப்படுவர். எம்எஸ் கொண்ட மக்களில், எதிர் மனச்சோர்வு மருந்து சிகிச்சைகளை ஆராய்ந்த ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சுருக்குகின்றோம். முறையியல் தர திட்ட அளவைகளை சந்தித்த, மொத்தம் 70 பங்கேற்பாளர்களை கொண்ட இரண்டு ஆய்வுகளை நாங்கள் கண்டோம்;ஒன்று (28 பங்கேற்பாளர்கள்), டெசிபிரமைன் விளைவுகளை அறிக்கையிட்டது; மற்றொன்று (42 பங்கேற்பாளர்கள்), பரோயக்ஸ்டின் விளைவுகளை அறிக்கையிட்டது. இரண்டு ஆய்வுகளும், குறைந்த காலக்கட்டத்தில் (ஐந்து/பன்னிரெனண்டு வாரங்கள்) இரண்டு சிகிச்சைகளும் மனச்சோர்வில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. வாந்தி அல்லது தலைவலி போன்ற தீங்கான விளைவுகள் அடிக்கடி ஏற்பட்டன. குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களால் முடிவுகள் பாதிக்க பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாலும், மற்றும் அநேக பங்கேற்பாளர்கள் ஆய்வுகளை முடிக்காத உண்மையாலும், மல்டிபிள் ஸ்க்லேரோசிஸ்-இல் மனச்சோர்விற்கான நீண்டக்கால மருந்து சிகிச்சைக்கான மேற்படியான ஆய்வுகள் மிக தெளிவாக தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information