மார்பக பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது, மார்பகத்தை பெரிதாக்குதல், மார்பகத்தை சிறிதாக்குதல், மற்றும் மார்பகத்தை மறுசீரமைத்தல் (எடுத்துக்காட்டு: மார்பக புற்று நோய் நோயாளிகளில் மார்பக நீக்கத்திற்கு பிறகாக) ஆகியவற்றை உள்ளடக்கும். பெரும்பாலான மருத்துவமனைகளில், இத்தகைய அறுவை சிகிச்சைகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. மருத்துவமனையில் தங்கும் கால அளவு, மிக சரியாக 3 நாட்கள் ஆகும். இந்த அறுவை சிகிச்சைகள், புண் தொற்று, திரவக் கோர்வை, மார்பக திசுக்களின் சில பகுதிகள் செத்து போகுதல், மற்றும் புண் ஆறுவதில் கோளாறுகள் என்று பல சிக்கல்களின் அபாயத்தை கொண்டுள்ளன, பெரும்பாலும், இவை சிறிய அளவே மற்றும் முடிவை பாதிக்காது, ஆனால் மருத்துவமனையில் தாங்கும் கால அளவை நீட்டி மற்றும் கூடுதலான மருத்துவ சிகிச்சைக்கு வழி வகுக்கக் கூடும். பல பத்தாண்டுகளாக, இந்த செய்முறைகளுக்கு பின், ஏற்படக்கூடிய சிக்கல்களை குறைக்க எதிர்பார்த்து, இதை ஆதரிக்க ஆதாரம் இல்லாத போதும், அறுவை சிகிச்சையாளர்கள் புண் வடுகால்களை உட்பொருத்தினர். மருத்துவ சோதனைகளில் கிடைக்கப் பெற்ற குறைந்த அளவு ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்து, மார்பக குறைவு அறுவை சிகிச்சையில் வடுகால்களை உட்பொருத்துவதினால் நோயாளியில் விளைவுகள் மேம்பட்டன என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை. இதற்கு முரண்பாடாக, வடுகால்களின் உபயோகம், ஒரு நாள் அளவில் மருத்துவமனையில் தங்கும் கால அளவை நீட்டித்தது என்பதற்கு தொடர்புடையதாக இருந்தது. மார்பக மேம்படுத்துதல் அல்லது மறுசீரமைப்பிற்கு உள்ளான மக்களில் எந்த சோதனைகளும் இல்லை.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.