கர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உணவு திட்ட ஆலோசனை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

நீரிழிவு நோய், அதிகரித்த இரத்த சர்க்கரை மற்றும் சிறுநீரில் சர்க்கரை ஆகியவற்றோடு அசாதாரண குளுகோஸ் வளர்சிதை மாற்றத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இது, கர்ப்பக் காலத்தில் அதிகரித்து மற்றும் பிள்ளை பேற்றுக்கு பின் மறைந்தால், அது கர்ப்பக் கால நீரிழிவு நோய் அல்லது ஜெஸ்ட்டேசனல் டியாபடிஸ் மெலிடஸ் அல்லது ஜிடிஎம் என்றும் அழைக்கப்படும். கர்ப்பக் காலத்தில், 1% முதல் 14% வரையான பெண்கள், ஜிடிஎம் கொண்டிருப்பர், சில பெண்கள் பிறரை காட்டிலும் அதிக அபாயத்தை கொண்டிருப்பர் மற்றும் தீவிரம் கூட மாறுபடும். கர்ப்பக் கால் குளுகோஸ் சகிப்பின்மை, ஒரு குறிப்பிட இனம், முந்தைய ஜிடிஎம் , இரண்டாம் வகை நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கும். பெரும்பான்மையான நேரத்தில், எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை அல்லது களைப்பு, மிகுதியான தாகம், அதிகளவில் சிறுநீர் கழித்தல், மற்றும் மங்கிய பார்வை ஆகியவை அறிகுறிகளில் அடங்கும். மிக பெரிய குழந்தை, குழந்தை பிறப்பின் போது தோள் சிக்கிக் கொள்ளுதலின் அதிகரித்த அபாயம் மற்றும் குழந்தை பிறப்பின் போது தாய்க்கு காயம் ஏற்படுதல் போன்ற குறிப்பிடத்தகுந்த பிரச்சனைகளை ஜிடிஎம் ஏற்படுத்தும். தூண்டப்பட்ட குழந்தைப் பிறப்பு மற்றும் சிசேரியன் குழந்தைப் பிறப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்க கூடும். குழந்தைகள் வெகு சீக்கிரத்தில் பிறந்து மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சனைகள் மற்றும் மஞ்சள் காமாலையால் வாழ்வதற்கான வாய்ப்பு குறைவாக கொண்டிருக்கும். கூடுதலாக, பிற்கால வாழ்வில், தாய் மற்றும் குழந்தையில் அதிகரித்த நீரிழிவு நோய் அபாயம் போன்ற நீண்ட-கால விளைவுகளும் உண்டாகக் கூடும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில், முழு தானிய மாவு சத்து பொருள்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு (லோ க்ளைசெமிக் இன்டெக்ஸ், யெல்ஜிஐ) கொண்ட உணவுகள் உதவியாக இருப்பதால், உணவுமுறை திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிக்கும். யெல்ஜிஐ உணவு முறை திட்டங்கள், உணவு செரிமானத்தின் வேகத்தைக் குறைத்து, உணவிற்கு பின்னாக வரும் சர்க்கரை சுமைக்கு உடல் சிறப்பாக சீர்படுத்தி கொள்வதற்கு அனுமதிக்கும். ஆதலால், கர்ப்பக் காலத்தில், உணவு முறை திட்ட ஆலோசனை ஜிடிஎம் பெறும் பெண்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விளைவுகளைக் குறைக்கும் என்பது சாத்தியமாகும்.

ஜிடிஎம்-ஐ குறைப்பதற்கு கர்ப்பக் கால உணவு முறை திட்ட ஆலோசனையின் இந்த திறனாய்வு,மேலை நாடுகளில் நடத்தப்பட்ட, மற்றும் 107 பெண்கள் கொண்ட மூன்று சோதனைகளை கண்டது. 25 பெண்களைக் கொண்டிருந்த ஒரு சோதனை, அதிக-நார் சத்து கொண்ட உணவு முறைகளை, சாதாரண கர்ப்பக் கால உணவு முறைகளோடு ஒப்பிட்டதை கண்டது. 82 பெண்களை கொண்ட இரண்டு சோதனைகள், எல்ஜிஐ உணவு முறையை உயர் க்ளைசெமிக் குறியீடு உணவோடு ஒப்பிட்டதை கண்டன, அந்த சோதனைகளில் ஒன்று ஒரு உடற்பயிற்சி கூற்றையும் கொண்டிருந்தது. அதிக-நார் சத்து உணவு முறை திட்டங்களின் சோதனையில் இந்த திறனாய்வுடன் தொடர்புடைய விளைவுகள் தெளிவற்றதாக இருந்தது. குறைந்தளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் உணவு முறை திட்டங்களின் முடிவுகள், தாய்க்கும் மற்றும் குழந்தைக்கும் பயனளிக்கும் என்று பரிந்துரைக்கின்றன. எனினும், இந்த விளைவுகளில் நம்பிக்கை ஏற்படுவதற்கு, ஆதாரம் உறுதியானதாக இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.