ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர் பயிற்சிமுறை மற்றும் நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கு கல்வியியல் விளையாட்டுகள்

ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் எவ்வாறு அவர்களின் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தலாம் என்பதற்கு பல வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த மற்றும் அவர்களின் மனப்பான்மை மற்றும் செயல்திறனை மாற்றுவதற்கு விளையாட்டுகளை பயன்படுத்துவது ஒரு வழியாகும். இரண்டு தகுதியுடைய ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டது. முதல் ஆய்வு, பேமிலி பாய்ட் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு நோய் தொற்று கட்டுப்பாட்டை பயிற்றுவித்த ஒரு விளையாட்டை மதிப்பிட்டது. இரண்டாவது ஆய்வு, "பாம்புகள் மற்றும் ஏணிகள்" (பரமபதம்) அட்டை விளையாட்டை பக்கவாத தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான தொடர் மருத்துவ கல்விக்கு பயன்படுத்தியதை மதிப்பிட்டது. இரண்டு ஆய்வுகளும், அறிவின் மேல் ஒரு நிலைப்பட்ட நன்மையான விளைவை காட்டவில்லை. ஆதலால், ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர் பயிற்சிமுறை அல்லது நோயாளி பராமரிப்பை கல்வியியல் விளையாட்டுகள் மேம்படுத்துமா என்பது பற்றி நாங்கள் வெகுவாக நிச்சயமற்று உள்ளோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information