வயது வந்தவர்களில், குறுகிய-கால வலிக்கான சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன், டென்ஸ்)

பின்னணி

குறுகிய-கால வலி என்பது மிக அண்மையில் விளைந்ததான மற்றும் வரையறுக்கப்பட்ட கால அளவைக் கொண்ட வலி ஆகும். குறுகிய-கால வலி, அறுவை சிகிச்சை, உடல் காயம் (எ.கா. உடைந்த எலும்புகள், தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள்) மற்றும் மருத்துவ நடைமுறைகள் (எ.கா. நரம்பு துளையிடுதல் மற்றும் சிக்மோய்டோஸ்கோபி) ஆகியவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன் (டென்ஸ்) என்பது தோல் மேற்பரப்பில் இணைக்கப்பட்ட மின்முனை பட்டைகள் பயன்படுத்தி உடலில் லேசான மின் அதிர்வுகளை செலுத்தி வலியை போக்குவதற்கான ஒரு சிகிச்சையாகும்.

திறனாய்வு கேள்வி

வயது வந்தவர்களில், குறுகிய-கால வலியை டென்ஸ் போக்குமா?

ஆய்வு பண்புகள்

டிசம்பர் 3, 2014 வரை வெளியான 1346 மக்களை ஆய்வு செய்த 19 மருத்துவ பரிசோதனைகளை நாங்கள் சேர்த்துள்ளோம். குறுகிய-கால வலி இருக்கும் இடத்தில், ஒரு வலுவான வலியற்ற 'கூரிய குத்தல்' உணர்வை ஏற்படுத்தும் டென்சை சோதனைகள் செலுத்தின. கர்ப்பப்பை வாய் லேசர் சிகிச்சை, நரம்பு துளையிடுதல் , சிக்மோய்டோஸ்கோபி, விலா எலும்பு முறிவுகள் மற்றும் கருப்பை சுருக்கங்களுக்கான டென்சை சோதனைகள் மதிப்பீடு செய்தன. குழந்தைப் பிறப்பு, பல் சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மாதவிடாய் தொடர்புடைய வலிக்கான டென்சை மதிப்பிட்ட சோதனைகளை நாங்கள் சேர்க்கவில்லை, ஏனெனில், அவை மற்ற காக்குரேன் திறனாய்வுகளின் பொருளாக இருந்தன. பதினொரு சோதனைகள் வகைப்பாட்டிற்காக காத்திருக்கின்றன.

முக்கிய முடிவுகள்

குறுகிய-கால வலியின் தீவிரத்தை குறைப்பதில் போலி டென்சை (எந்த மின்சாரமும் இல்லாமல் செலுத்துதல்) காட்டிலும், டென்ஸ் சிறப்பாக இருந்தது, ஆனால் வலி குறைப்பு அனைத்து சோதனைகளிலும் சீராக இல்லை. இந்த கண்டுபிடிப்பு, 19 சோதனைகளில் ஆறிலிருந்து மட்டுமேயான பகுப்பாய்வின் அடிப்படையைக் கொண்டது. ஒரு உறுதியான முடிவெடுக்க, போதிய எண்ணிக்கையிலான நோயாளிகள் இல்லாது இருந்தது.

ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகள் டென்ஸ் பட்டைகள் கீழே அரிப்பு மற்றும் சிவத்தல் அனுபவத்தை பெற்றனர், அல்லது டென்ஸ் ஏற்படுத்தும் உணர்வை பிடிக்காமல் போயினர்.

ஒட்டுமொத்தமாக, சில நோயாளிகளில் குறுகிய-கால வலியை டென்ஸ் குறைக்க நேரிடும் என்று முடிவு செய்தோம், ஆனால் சான்றின் தரம் பலவீனமாக இருந்தது. டென்ஸ் மலிவானது, பாதுகாப்பானது, மற்றும் சுயமாய்-செலுத்தக் கூடியது. டென்ஸ் என்பது ஒரு தனித்துவ சிகிச்சை தேர்வாகவோ, அல்லது பிற சிகிச்சைகளோடு கூட்டாக அளிக்கக் கூடிய சிகிச்சையாகவோ கருதப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

சான்றின் தரம்

ஆய்வுக்குள்ளான மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், மற்றும் சில நோயாளிகள் தாங்கள் டென்ஸ் அல்லது போலி டென்சை பெறுகிறோம் என்று தெரிந்திருந்ததாலும், சான்றின் தரம் மிதமான முதல் குறைவானதாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information