உயர்-வருமான நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள்

தனிப்பட்ட கலந்தாய்வு, தன்னார்வ கலந்தாய்வு மற்றும் சோதனையிடல், சரியிணை விளக்கக் கல்வி, அவர்களின் வாடிக்கையாளர்களோடு ஆணுறையை பயன்படுத்த ஒப்பந்த திட்ட திறன்கள், வலியுறுத்தல் மற்றும் உறவுமுறை ஆதரவு, மனப்பான்மைகள் மற்றும் நம்பிக்கைகளை கலந்தாலோசித்தல், காணொளிகள் மற்றும் பங்கு-நாடகம் போன்ற நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள் பால்வினை தொற்றுகள் பரவியிருக்கும் பகுதியை குறைத்து மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி பரவல் பற்றிய அறிவை மேம்படுத்தும்.

எச்ஐவி நிகழ்வு அல்லது நோய் பரவியுள்ளமை போன்ற உயிரியல் முடிவு புள்ளிகளை கொண்ட விளைவுகளோடு எச்ஐவி-ஐ தடுப்பதற்கான திறன்மிக்க சிகிச்சை தலையீடுகளை அடையாளம் காண சோதிப்பதற்கு, இந்த புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மேற்படியான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவைப்படுகின்றன. உயர்-வருமான நாடுகளில், ஆண் அல்லது திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information