கீல்வாதத்திற்கு கான்ட்ராய்டின்

கீல்வாதத்திற்கு கான்ட்ராய்டின் சல்பேட்டின் விளைவுகள் பற்றி அறிய இந்த திறனாய்வை நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் நவம்பர் 2013 வரையுள்ள ஆய்வுகளைத் தேடி 9,110 மக்கள் பங்குப்பெற்ற 43 ஆய்வுகளைக் கண்டறிந்தோம். பெரும்பான்மையான ஆய்வுகள் 1 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை முழங்கால் கீல்வாதம் (சில கை, ஒரு இடுப்பு) உள்ளவர்களில் மேற்கொள்ளப்பட்டது. கான்ட்ராய்டிண் தயாரிப்பாளர்கள் பல ஆய்வுகளுக்கு நிதி வழங்கி இருந்தனர்.


இந்த ஆய்வு, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவிப்பதாவது:

- கான்ட்ராய்டின் குறுகிய கால கட்டத்திற்கு (6 மாதத்திற்குள்) வலியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட செய்யலாம்.

- கான்ட்ராய்டின் ,சிகிச்சை பெறுபவர்களில் சிறிதளவு முழங்கால் மூட்டுவலியை 20 % மேம்படுத்தும்.

லெக்கூஸ்நி (Lequesne) குறியீடில் ( வலி, செயல்பாடு, இயலாமை இணைந்த குறியீடு) அளக்கும் போது கான்ட்ராய்டின் பெரும்பாலும் வாழ்க்கை தரத்தை சிறிது மேம்படுத்துகிறது.

- கான்ட்ராய்டின் மற்ற மருந்துகள் அல்லது கருவிகளோடு ஒப்பிடுகையில் குறைந்த அல்லது வேறுபாடு இல்லாத பாதகமான எதிர் விளைவுகள் கொண்டது; மற்றும்

- பாதிக்கப்பட்டமூட்டுகளில் எக்ஸ் கதிர்களில் காணப்படும் மூட்டு இடைவெளி குறுகுவதை கான்ட்ராய்டின் சற்று குறைகிறது.

நங்கள் திருப்தி இல்லாத முறைகள் கொண்டு கான்ட்ராய்டின் விளைவுகளை மதிப்பிட்ட பல ஆய்வுகளைக் கண்டறிந்தோம். சில விளைவுபயன்களுக்கு போதுமான தரவு இல்லை. ஆராய்ச்சி முறையியல் நன்றாக இருந்த சில ஆய்வுகளில், கான்ட்ராய்டின் வலி மற்றும் உடல் செயல்பாட்டில் விளைவற்றதாக இருந்தது. வெவ்வேறு தர விதிகளுடன் ஆராய்ச்சி முறையியல் கொண்ட மற்ற ஆய்வுகள் கான்ட்ராய்டின் அளிப்பதினால் வலி மற்றும் உடல் செயல்பாடு மேம்படுகிறது என்று தெரிவித்தன.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் கான்ட்ராய்டின் என்றால் என்ன?

கீல்வாதம் என்பது முழங்கால் அல்லது இடுப்பு போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். குருத்தெலும்பை மூட்டு இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பைச் சரி செய்ய முயற்சிக்கும் அனால் அந்த சீரமைக்கும் எலும்பு வளர்ச்சி நிலைமையை மோசமாக செய்யலாம். இது மூட்டு வலியினையும், மூட்டின் உறுதியற்ற நிலையினையும் ஏற்படுத்தலாம். இது உடல் செயல்பாடு, அல்லது மூட்டு செயல்பாட்டு திறனைப் பாதிக்கும்.

கான்ட்ராய்டின் என்பது கான்ட்ராய்டின் சல்பேட்டை முதன்மைப் பொருளாகக் கொண்ட ஒரு எழுதிக்கொடா மருந்து (over-the-counter) ஊட்டச் சத்துஆகும். இது குருத்தெலும்பு சீரழிவு நிறுத்தல் மற்றும் இழந்த குருத்தெலும்பு மறுசீரமைப்பில் நன்கு செயல்படுகிறது என கூறப்படுகிறது. இது மனித உடலில் உள்ள குருத்தெலும்பு மூலக்கூறுகள் உருவாக தேவையான சல்பர்அடங்கிய அமினோ அமிலங்களை கொண்டிருக்கிறது.

கான்ட்ராய்டின் பெறும் கீல் வாதம் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும்?

6 மாதத்திற்கு பின் வலியின் அளவு (குறைந்த அளவு சிறந்தது):

- கான்ட்ராய்டின் எடுத்தவர்கள் மருந்தற்ற குளிகை எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் 0 to 100 என்ற அளவுகோலில் 10 புள்ளிகள் குறைவாக உள்ளதாக மதிப்பீடு செய்தனர் (10% முழுமையான முன்னேற்றம்).

- கான்ட்ராய்டின் உட்கொண்டவர்கள் 0 முதல் 100 வரை என்ற அளவுகோலில், தங்கள் வலியை 18 என்று மதிப்பீடு செய்தனர்.

- மருந்துப்போலி உட்கொண்டவர்கள் 0 முதல் 100 வரை என்ற அளவுகோலில், தங்கள் வலியை 28 என்று மதிப்பீடு செய்தனர்.

6 மாதங்களுக்கு மேல் மேற்கொண்ட ஆய்வுகளில், போலி மருந்தை காட்டிலும் கான்டிராய்டின் அதிகம் வலியைக் குறைக்கிறது என்பது உறுதியற்றதாக உள்ளது.

முழங்கால் மூட்டு வலி 20 % குறைந்துள்ளது (WOMAC1 என்ற வலி உப அளவுகோலில் அளவிடும்போது)

- 100பேரில் மேலும் 6 பேர் தங்கள் மூட்டுவலியில்20% முன்னேற்றம் கண்டனர் (6% முழுமையான வேறுபாடு).

-ஒப்பீட்டில் போலி மருந்து எடுத்துக்கொண்ட 100 பேரில் 47 பேரும் கான்ட்ராய்டின் எடுத்துக்கொண்ட 100 பேரில் 53 பேரும் தங்கள் முட்டி வலி குறைந்ததாக உணர்ந்தனர்.

6 மாதங்களுக்கு பிறகு லெக்கூஸ்நி (Lequesne) குறியீடு ( வாழ்க்கை தரத்தை குறிக்கும் வலி மற்றும் உடல் செயல்பாடு இணைந்த குறியீடு)

- கான்ட்ராய்டின் எடுத்தவர்கள் லெக்கூஸ்நி (Lequesne) குறியீட்டில் 2 புள்ளிகள் குறைவாக எடுத்தனர் (அளவு மதிப்பெண் வரம்பு 0-24)

- கான்ட்ராய்டின் எடுத்தவர்கள்0-24 என்ற லெக்கூஸ்நி (Lequesne) குறியீட்டு அளவுக்கோலில் 5 ஆக இருந்தது.

- மருந்துப்போலி எடுத்தவர்களில் லெஸ்கூஸ்நி (Lequesne) குறியீட்டு 0-24 என்ற அளவீட்டில் 7 ஆகா இருந்தது.

ஊடுகதிர் நிழற்படத்தில் விளைவுபயன்: 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்தபட்ச கூட்டு இடைவெளி அகலம் (மி.மீ.) குறைந்தது (குறைந்தபட்ச கூட்டு இடைவெளி அகலம் குறைந்தது நல்லது)

- கான்ட்ராய்டின் எடுத்தவர்களில் குறைந்த பட்ச கூட்டு இடைவெளி அகலம், மருந்து போலி எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் 0.18 மிமீ குறைவாக குறுகியது.

- கான்ட்ராய்டின் எடுத்தவர்களில் 0.12 மிமீ குறைந்தபட்ச கூட்டு இடைவெளி அகலம் குறைப்பு இருந்தது.

- போலி மருந்து எடுத்தவர்கள் 0.30 மிமீ குறைந்தபட்ச கூட்டு இடைவெளி அகலம் குறைப்பு இருந்தது.

கடுமையான எதிர் விளைவு நிகழ்வுகள்:

- கான்ட்ராய்டின் எடுத்துக்கு கொண்ட 100 பேரில் 3 க்கு குறைவானவர்கள் கடுமையான எதிர் விளைவுகள் அனுபவித்தனர்(கடுமையான நுரை ஈரல் தொற்று அல்லது காசநோய் போன்றவை)

  கான்ட்ராய்டின் உட்கொண்டவர்களில்நூற்றில் 3 பேர் பாதகமான நிகழ்வுகள் அனுபவித்தனர் அதே சமயம் மருந்தற்ற குளிகை உட்கொண்டவர்களில் நூற்றில் 6 பேர் பாதகமான நிகழ்வுகள் அனுபவித்தனர் 

 தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளால் ஆய்வுகளிலிருந்து விலகியவர்கள்

-  தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளால் ஆய்வுகளிலிருந்து விலகும் ஆபத்துக்கூறு கான்ட்ராய்டின் அல்லது மருந்தற்ற குளிகை எடுத்துக் கொண்டவர்களுக்கு இடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை. இது எதேச்சையாக நடந்திருக்கக் கூடும்.

1 வெஸ்டேர்ன் ஒன்டாரியோ மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகங்கள் கீல்வாதம் குறியீடு (Western Ontario and McMaster Universities Osteoarthritis Index)

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information