முழங்கால் மற்றும் இடுப்பு கீல்வாதம் உள்ளவர்களுக்கு நீர் சார் உடற்பயிற்சி

திறனாய்வு கேள்வி

முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்படும் மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கபட்டோருக்கு அளிக்கப்படும் நீர் சார் பயிற்சிகளால் ஏற்படும் பலன்கள் என்ன?

பின்புலம்: மூட்டு வலி, தொடு வலி, மற்றும் மூட்டுகளின் அசைவுகளில் ஏற்படும் வரையறை போன்ற அறிகுறிகளைக் கொண்ட நாட்பட்ட பாதிப்பே மூட்டு முடக்கு கீல்வாதமாகும்.

முட்டு வலி, தொடு வலி, மற்றும் முட்டுகளிள் அசைவுகளிள் ஏற்படும் வரையறை போன்ற அறிகுறிகளை கொண்ட நாட்பட்ட பாதிப்பே மூட்டு முடக்கு கீல்வாதமாகும். இதனை முழுமையாக குணப்படுத்தும் வழிமுறைகள் தற்போதில்லை. ஆகையால் பாதிக்கப்பட்டோருக்கு உள்ள நோயின் அறிகுறிகளுக்கான சிகிச்சை மற்றும் நோய் மேலும் அதிகமாகாமல் தடுப்பதற்கான சிகிச்சை மட்டுமே சாத்தியம். பங்கேற்பாளர் நீரில் அமிழ்ந்து கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளே நீர் பயிற்சியாகும். அப்பயிற்சிகளின் போது பொதுவாக நீரின் வெப்பநிலை 32°C-36°C க்குள் இருத்தல் வேண்டும். . இது ஒரு வெளியிடப்பட்ட காக்ரென் திறனாய்வின் நிகழ்நிலைபடுத்தப்பட்ட திறனாய்வு ஆகும். இது முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்படும் மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கபட்டோருக்கு நீர் பயிற்சிகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளிப்படுத்துகிறது.

ஆய்வு பண்புகள்

முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்படும் மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கபட்டோருக்கு அளிக்கப்படும் நீர் பயிற்சிகளால் ஏற்படும் பலன்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டவற்றை இந்த நிகழ்நிலைப்படுத்தப்பட்ட காக்ரென் திறனாய்வு சுருக்கத்தில் நாங்கள் வழங்குகிறோம். ஏப்ரல் 28 2015 வரையிலான தொடர்புடைய எல்லா ஆய்வுகளையும் தேடியபிறகு இது தொடர்பாக கடைசியாக வெளிவந்த காக்ரென் திறனாய்வு வடிவத்திற்கு பின்னர் உள்ள ஒன்பது புதிய ஆய்வுகளை நாங்கள் சேர்த்தோம். மொத்தத்தில் 1190 பங்கேற்பாளர்களை கொண்ட 13 ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். பெரும்பாலான ஆய்வுகள், மிதமான அல்லது மிக மிதமான நோய் அறிகுறிகளுடைய முழங்கால் அல்லது இடுப்பு மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர்களைச் சேர்த்துள்ளன.

முக்கிய முடிவுகள்

முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்பட்ட மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கபட்டவர்கள் கலந்த ஒரு குழுவிற்கு அளிக்கப்படும் நீர் பயிற்சியினால், சிகிச்சை தொடர் முடிவில் (12 வாரங்கள் வரை அளிக்கப்படும் நீர் பயிற்சிகள்), வலியில் மேம்பாடும், உடல் இயலாமையில் சிறிதளவு முன்னேற்றமும் , வாழ்க்கைதரத்தில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த திறனாய்வின் நிகழ்நிலை முடிவுகள் முந்தைய வெளியிடப்பட்ட காக்ரென் திறனாய்வின் வடிவினை மாற்றவில்லை.

வலி (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் குறைந்த வலி):

நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொண்டோர், நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் , தங்கள் வலி 0-100 புள்ளிகள் என்ற அளவுகோலில் , ஐந்து புள்ளிகள் குறைந்ததாக (3-8 புள்ளிகள் குறைவாக) மதிப்பிட்டுள்ளனர் (5% முழுமையான முன்னேற்றம்).

உடற் பயிற்சி திட்டத்தை முடித்தவர்கள் 0-100 புள்ளிகள் அளவு கோலில் தங்கள் வலியை 41 புள்ளிகள் என்று மதிப்பிட்டனர்.

கட்டுபடுத்தப்பட்ட குழுவில் உள்ளோர், 0-100 புள்ளி அளவுகோலில் தங்கள் வலியை 46 என மதிப்பிட்டுள்ளனர்.

உடல் இயலாமை (குறைந்த அளவு மிக நன்று):

நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொண்டோர், நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொள்ளாதவர்களளோடு ஒப்பிடுகையில், தங்கள் உடல் இயலாமை 0-100 புள்ளி அளவு கோலில் ஐந்து புள்ளிகள் குறைவாக உள்ளதாக (3-8 புள்ளிகள் குறைவாக) மதிப்பிட்டுள்ளனர் (5% முழுமையான முன்னேற்றம்).

நீர் பயிற்சியில் பங்குகொண்டோர் 0-100 புள்ளி அளவுகோலில் தங்கள் உடல் இயலாமை 39 புள்ளிகள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

கட்டுபடுத்தப்பட்ட குழுவில் உள்ளோர், 0-100 புள்ளி அளவுகோலில் தங்கள் உடல் இயலாமையை 44 புள்ளிகள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் தரம் (அதிக புள்ளிகள் என்றால் சிறந்த வாழ்க்கைத் தரம்):

நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொண்டோர், நீர் பயிற்சி செயல் முறையில் பங்கு கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் , தங்கள் வாழ்க்கை தரம் 0-100 புள்ளி அளவுகோலில் ஏழு புள்ளிகள் அதிகமாக (0-13 புள்ளிகள் அதிகமாக) மதிப்பிட்டுள்ளனர் (13% முழுமையான முன்னேற்றம்).

நீர் பயிற்சியில் பங்குகொண்டோர் 0-100 புள்ளி அளவுகோலில் தங்கள் வாழ்க்கை தரம் 57 புள்ளிகள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

கட்டுபடுத்தப்பட்ட குழுவில் உள்ளோர், 0-100 புள்ளி அளவுகோலில் தங்கள் வாழ்க்கைத்தரத்தை 50 புள்ளிகள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

மூட்டுகளில் எக்ஸ் கதிர்கள் - எந்த ஆய்வும் இவ்விளைவு பலனை அளவிடவில்லை.

ஆய்வில் இருந்து விலகியோர்

நீர் பயிற்சி செய்முறையில் பங்கு கொள்ளாதவர்களை விட பங்கு கொண்டோரில் 100 இல் முன்று பேர் அதிகமாக விலகி உள்ளனர் (3% முழுமையான பெருக்கம்).

நீர் பயிற்சி குழுவில் இருந்த 100 பேரில் 18 பேர் விலகி உள்ளனர்.

கட்டுபடுத்தப்பட்ட குழுவில் இருந்த 100 பேரில் 15 பேர் விலகி உள்ளனர்.

தீவிரமான எதிர் விளைவு நிகழ்வுகள்:

நீர் சார் பயிற்சியில் பங்கு கொண்டோர்க்கு தீவிரமான எதிர் விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை

சான்றின் தரம்

.முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்படும் மூட்டு முடக்கு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் நீர் பயிற்சிகள், பயிற்சி திட்டத்தின் முடிவில் வலி மற்றும் உடல் இயலாமையைக் குறைக்கலாம் என்றும் , வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் என்றும் மிதமான தர சான்றுகள் காண்பிக்கின்றன .மேலும் எதிர்காலங்களில் செய்யப்படும் ஆய்வுகள் இம்முடிவுகளை மாற்றக்கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: மோகன் கிருஷ்ணன் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information